tamilnadu

img

செவிலியர் போராட்டமும் நிறைவேறிய கோரிக்கைகளும்! - நே.சுபின்

செவிலியர் போராட்டமும் நிறைவேறிய கோரிக்கைகளும்!

தமிழ்நாடு செவிலியர்க ளின் நீண்ட காலப் போ ராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருவது மிகுந்த வரவேற்புக்குரியது. ஒப்பந்தச் செவிலியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் இன்று சாத்தியமாகி யிருப்பது, செவிலியர்களின் அயராத போராட்டத் திற்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றியின் சான்றாகும்.  

பணி நிரந்தரமும் பதவி உயர்வும்  கடந்த 9 ஆண்டுகளாகத் தொகுப்பூதிய முறை யில் பணியாற்றி வந்த செவிலியர்களில் 1,000 பேர் மூப்பின் அடிப்படையில் தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களின் ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 55,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், செவி லியர் கண்காணிப்பாளர் நிலை-2 ஆக 270 பேரும், நிலை-1 ஆக 44 பேரும், சுமார் 160 பேர் செவிலியர் போதகராகவும் பதவி உயர்வு பெற் றுள்ளனர்.

கொரோனா காலத்தின் உச்சத்தில் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டு பின் நீக்கப்பட்ட 725 செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது, அவர்களின் குடும்பங்க ளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.  மகப்பேறு விடுப்பு:  ஒரு வரலாற்றுச் சாதனை தொகுப்பூதியச் செவிலியர்களுக்குப் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு, தற்போது ஆறு மாத கால ஊதியத்துடன் கூடிய விடுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-இல் போராட்டத்தின் விளைவாக இது வழங்கப்பட்டாலும், பின்னர் தேசிய சுகாதாரக் குழும இயக்குநரின் உத்தரவால் நிறுத்தப்பட்டு, வழங்கப்பட்ட ஊதியமும் திரும்பப் பெறப்பட்டது. தற்போது அந்த முந்தைய காலங்களில் ஊதிய மில்லா விடுப்பு எடுத்தவர்களுக்கும் பயன் கிடைக்கும் வகையில் புதிய அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இதனால் 4,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பயனடைவார்கள். ஊதிய உயர்வு மற்றும் நிதி ஒதுக்கீடு தேசிய சுகாதாரக் குழுமத்தின் கீழ் பணி யாற்றும் 41,000 செவிலியர்கள் மற்றும் மருத்துவ  ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் ஊதிய உயர்வு  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 18,000 ரூபாயாக இருந்த ஊதியம் தற்போது 21,000 ரூபாயாக உயர்கிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டி ற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தி ருக்கும் நெருக்கடியான சூழலிலும், செவிலியர்க ளின் நலன் கருதி நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதல மைச்சருக்கும், அமைச்சருக்கும் சங்கம் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறது. களத்தில் நின்ற போராட்டங்கள் இந்த வெற்றிகள் எளிதில் கிடைத்துவிட வில்லை. கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி சென்னை யில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம், காவல்துறையின் அடக்குமுறைகளையும் கடந்து தொடர்ந்தது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், நந்திவரம் எனத் திறந்தவெளிகளிலும், டிசம்பர் மாதக் கடும் குளிரிலும் செவிலியர்கள் மன உறுதி யுடன் போராடினர். காவல்துறையினர் செவிலியர்க ளைக் கைது செய்து வெவ்வேறு மாவட்டங்களில் கொண்டு போய் இறக்கிவிட்ட போதும், அந்தந்த மாவட்டங்களிலேயே போராட்டங்கள் தொடர்ந்தன.  இப்போராட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், சிஐடியு, மாதர் சங்கம், வாலிபர் சங்கம்,  மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புக ளும் உற்ற துணையாக நின்று வழிநடத்தின. செவிலியர்களின் எதிர்பார்ப்பு தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்படும்போது வெறும் 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்ட நிலை மாறி, இன்று போராட்டங்களால் ஊதியம் உயர்ந்துள்ளது.

எனினும், “சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற அடிப்படையில் அனைத்துத் தொ குப்பூதியச் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் முதன் மையான எதிர்பார்ப்பு. ஒரு வருட கால மகப்பேறு விடுப்பு மற்றும் அனைத்து மருத்துவப் பணியிடங்க ளையும் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றுவது காலத்தின் கட்டாயமாகும். மருத்துவத் துறையைப் பாதுகாக்க... இந்தப் போராட்டம் செவிலியர்களுக்கானது மட்டுமல்ல; அரசு மருத்துவத் துறையைப் பாது காப்பதற்கானதுமாகும்.

ஒன்றிய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள், தேசிய சுகாதாரக் குழுமத்தின் மூலம் தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையையே ஊக்குவிக்கின்றன. ஆனால், கொரோனா போன்ற பேரிடர்களை அரசுத் துறை மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை உலகம் உணர்ந்துள்ளது. எனவே, பொது  சுகாதாரத் துறை ஒரு சேவைத் துறையாகத் தொடர வேண்டுமெனில், அதில் பணியாற்றும் ஊழி யர்கள் அனைவரும் நிரந்தரத் தன்மையுடன் இருப்பதே பாதுகாப்பானது.