பெண்ணை இழிவுபடுத்தும் நயினார் நாகேந்திரன்!
ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் சென்னை, பிப். 14 - தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை விமர்சிப்பதாகக் கூறி, ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் மோசமான கருத்தை வெளி யிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்தி ரனுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு, ஆணாதிக்க மற்றும் இந்துத்து வக் கோட்பாடுகள் ஒருபோதும் பெண்களின் கண்ணியத்தைப் பாது காக்க உதவாது என்பதையே காட்டு கிறது. அரசியல் விமர்சனங்கள் கொள்கை ரீதியாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு பெண்ணை “கருவி” யாகப் பயன்படுத்தி விமர்சனம் செய் வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்ணின் அடை யாளத்தை அரசியல் தாக்குதலுக் கான களமாக மாற்றுவதை அனு மதிக்க முடியாது. பெண்ணின் உழைப் பும், உடலும், அடையாளமும் ஆணா திக்க அமைப்பில் நுகர்வுப் பொரு ளாகவே பார்க்கப்படுகிறது என்ப தற்கு இந்தப் பேச்சே சான்று. பெண்ணை இழிவுபடுத்தும் எந்த அரசியலும் மக்கள் அரசியலாக இருக்க முடியாது. இத்தகைய ஆணா திக்க மனநிலையின் தொடர்ச்சி யாகவே நயினார் நாகேந்திரனின் பேச்சு அமைந்துள்ளது. எனவே, பெண்ணிய மாண்புகளைச் சிதைக்கும் வகையில் பேசிய அவர், உடனடி யாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
உ.வாசுகி கண்டனம் தவெக தலைவர்
விஜய், மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் கூட்டம் கூட்டி பஞ்ச் வசனம் பேசுவதும், இளைஞர்களில் ஒரு பகுதி யினரை ரசிக மனநிலையுடன் அரசியல் அற்ற சூழலில் வளர்த்து விடுவது குறித்து எழும் விமர்சனங்களில் நியாயம் உண்டு. ஆனால் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அவருக்குப் பதில் சொல்வது என்ற பெயரில் ஒரு பெண்ணை அவதூறு செய்வதை அனுமதிக்க முடியாது. பாலியல் குற்றவாளி களைக் கட்சியில் வைத்துக் கொள்ளும் பாஜகவின் பாணி வேறு எப்படி இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டனம் தெரிவித்துள்ளார்.