tamilnadu

img

ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

டெஹ்ரான், மார்ச் 9 - இஸ்ரேல் அமெரிக்க ராணு வத்தின் தாக்குதலால் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா காமேனி அவரது மனைவி மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர்.  இதன் பிறகு 88 உறுப்பினர் களைக் கொண்ட மதகுருமார்களின் அமைப்பான ‘நிபுணர்கள் அவை’ (Assembly of Experts), நடத்திய வாக்கெடுப்பில் மொஜ்தபா காமேனி புதிய உயர் தலைவராக தேர்வாகியுள்ளார்.  மொஜ்தபா காமேனி இதுவரை எந்தத் பொதுத் தேர்தலிலும் போட்டி யிட்டதில்லை. வெள்ளிக்கிழமை தொழுகை முதல் எந்த பொது நிகழ்வுகளிலும் வெளிப்படையாக கலந்து கொண்டதில்லை. எனி னும் கடந்த பல ஆண்டுகளாக அந்நாட்டின் முக்கிய தலை வர்களின் மத்தியில் அவர் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தவர். ஈரானின் துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) இவர் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.