மினி உலகக்கோப்பை கிரிக்கெட் - 2025
ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
கிரிக்கெட் உலகில் மினி உல கக்கோப்பை என அழைக்கப் படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கா னிஸ்தான் - ஆஸ்திரேலியா (குரூப் பி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது ஆகும். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அதே போல தோல்வி யடைந்தால் அந்த அணிக்கு சற்று சிக்கல் தான். அதாவது “குரூப் பி” பிரி வின் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் களம் காண உள்ளன. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று விட்டால், ஆஸ்திரேலியா வெளியேறி விடும். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவா? நாங்களா? என்ற அதிசய வாய்ப்பை ? ஆஸ்திரேலியா எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
அதனால் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்துவதே நல்லது என்ற அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. மறுபக்கம் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி னால், இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஆட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதாவது இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன் னேறும். ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தால் மினி உலகக்கோப்பையில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறி விடும். இதனால் 10ஆவது லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் தீவிர பயிற்சியுடன் கள மிறங்குவதால், இந்த ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு இதே வேலையா போச்சு
கிரிக்கெட் விளையாட்டு உருவானது இங்கிலாந்து நாட்டில் தான். அதற் கேற்றாற் போல அதிரடி, வலுவான ஆட்டம், ஆதிக்கம் என இங்கிலாந்து ஆடவர் அணி கிரிக்கெட் உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துள்ளது. மேலும் 3 உலகக்கோப்பைகளை (ஒருமுறை ஒருநாள் (2019), 2 முறை டி-20 (2010, 2022)) வென்றுள்ளது. ஆனால் 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையிலிருந்து, ஒவ்வொரு உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி பலம் குறைந்த இளம் அணிகளிடம் சர்ச்சை மற்றும் அதிர்ச்சி கலந்த தோல்வி களை அடுத்தடுத்து சந்திப்பது வாடிக்கையான சம்பவமாகிவிட்டது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் அயர்லாந்து அணியிடமும், 2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேச அணியிடமும், 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவிய நிலையில், தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் மினி உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி யிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு இங்கிலாந்து ரசிகர்கள் சமூகவலைத்தளங் களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வி ஏன்?
1. சொதப்பலான பந்துவீச்சு தான் இங்கி லாந்து அணியின் தோல்விக்கு முதல் காரணம் ஆகும். 6 பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தா லும் கட்டுக்கோப்பாக பந்து வீசவில்லை.
2. 177 ரன்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரனை வீழ்த்த இங்கிலாந்து அணி வியூகம் வகுக்கவில்லை. ஜத்ரனை விரைவில் ஆட்டமிழக்கச் செய்து இருந்தால் இங்கிலாந்து அணிக்கு இத்தகைய அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டு இருந்திருக்காது. 3. மிடில் ஆர்டரை விரைவிலேயே இழந்தது மற்றும் ரூட், பட்லர், ஓவர்டன், ஆர்ச்சர் ஆகியோர் இக்கட்டான சூழ்நிலையில் தேவையில்லாத ஷாட்களை தேர்வு செய்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணியை மினி உலகக்கோப்பையில் இருந்து துரத்தி விட்டது.
உலகக்கோப்பை வென்றது போல ஆப்கானிஸ்தானில் கொண்டாட்டம்
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதை ஆப்கா னிஸ்தான் ரசிகர்கள் தங்களது நாட்டில் மினி உலகக்கோப்பை யை வென்றது போல கொண்டாடி வருகின்றனர். இது ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு இரண்டாவது கொண்டாட்டம் ஆகும். ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை யில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய போதும் ஆப்கா னிஸ்தான் ரசிகர்கள் தங்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.