tamilnadu

img

மத்திய கிழக்கு போர் : கச்சா எண்ணெய் விலை உயர்வோடு நிற்காது; இந்தியப் பொருளாதாரத்திற்கே பெரும் அச்சுறுத்தல்!

மத்திய கிழக்கு போர் : கச்சா எண்ணெய் விலை உயர்வோடு நிற்காது;  இந்தியப் பொருளாதாரத்திற்கே பெரும் அச்சுறுத்தல்!

புதுதில்லி, மார்ச் 8- ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலி யத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர், சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது.  இதனால் இந்தியப் பொருளா தாரம் சந்திக்கவுள்ள கடுமையான பாதிப் புகள் குறித்து ஜி-20 மாநாட்டின் இந்தியப் பிரதிநிதியும், நிதி ஆயோக் கின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். 10 டாலர் விலை உயர்வு:  இந்தியாவிற்குப் பெரும் சுமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு 10 டாலர் உயர்வும், இந்தி யப் பொருளாதாரத்தின் அடிப்படைத்  தரவுகளைச் சிதைக்கக் கூடும்  என அமிதாப் காந்த் சுட்டிக்காட்டியுள் ளார். எண்ணெய் விலை 10 டாலர் அதி கரித்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி யில் சுமார் 0.2% முதல் 0.5% வரை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது நாட்டின் நிதிப்பற்றாக்குறையை (Fiscal Deficit) பெருமளவு அதி கரிக்கும் என்றும் அவர் கவலை தெரி வித்துள்ளார். பணவீக்கமும் நுகர்வோர் பாதிப்பும் கச்சா எண்ணெய் விலை உயர்வு  நேரடியாகப் பெட்ரோல், டீசல் விலை யை உயர்த்துவதுடன், அத்தியா வசியப் பொருட்களின் போக்குவரத்து செலவையும் அதிகரிக்கச் செய்யும்.  இது சங்கிலித் தொடர் விளைவாகப் பணவீக்கத்தை (Inflation) உச்சத்திற்கு கொண்டு செல்லும். “ஒவ்வொரு 10 டாலர் விலை உயர்வும் இந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கத்தை (WPI) சுமார் 0.9% முதல் 1% வரை அதிகரிக்கச் செய்யும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாங்கும் திறனைப் பெருமளவு பாதிக்கும். எரிசக்தி பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்திற்கும் மேலாக இறக்குமதியையே நம்பி யுள்ளது. போர் காரணமாக ஈரானில் இருந்தும், பிற வளைகுடா நாடுகளில் இருந்தும் எண்ணெய் விநியோகம் தடைபடுவது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு (Energy Security) விடுக்கப்பட்டுள்ள பெரும் சவாலாகும். அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணி ஈரானின் எண்ணெய் வயல்களைக் குறிவைத்துத் தாக்கு வது, உலகளாவிய எரிபொருள் விநியோ கச் சங்கிலியில் நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமிதாப் காந்த் எச்சரித்துள்ளார். மாற்று வழிகள் மற்றும் பொருளாதாரத் தயார்நிலை தற்போதையச் சூழலில் இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அதே  நேரத்தில் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி யை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமிதாப் காந்த் வலியுறுத்தியுள்ளார். போர் நீடித்தால், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு (Foreign Exchange Reserves) வேகமாகச் கரை யக்கூடும் என்பதால், ஒன்றிய அரசு மிகக் கவனமானப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டிய தருணம் இதுவென அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

முடங்கும் ஏற்றுமதி - விநியோகச் சங்கிலி

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல், இந்தியாவிற்கு வெறும் கச்சா எண்ணெய் விலை உயர்வு டன் முடிந்துவிடும் சிக்கல் அல்ல என்றும், அதற்கு மேலாக நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலைத்தன்மைக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.  பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவும் போது, கச்சா எண்ணெய் விலை குறித்து மட்டுமே கவலை கொள்ளப்படும். ஆனால், இம்முறை ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் யுத்த மானது, இந்தியாவின் மின்னணு சாத னங்கள் ஏற்றுமதி முதல் நாட்டின் நிதி நிலை வரை இந்தப் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கி யுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் மின்னணு சாதனங்கள் மற்றும்  பொறியியல் பொருட்கள் ஏற்று மதிக்கு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்கான கடல் வழிப் பாதைகள் மிக முக்கிய மானவை. தற்போது போர் காரண மாகச் செங்கடல் மற்றும் இந்தி யப் பெருங்கடல் பகுதிகளில் நில வும் பதற்றம், சரக்குக் கப்பல் போக்குவரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனால், இந்தியா வின் ஏற்றுமதி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வெளி நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் தேக்கமடைந்துள்ளன. இந்த விநியோகச் சங்கிலி பாதிப் பானது இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஒரு தேக்க நிலையை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.   நிதி மேலாண்மையில் ஏற்படும் சிக்கல்கள் எரிபொருள் விலை உயர்வால்  போக்குவரத்துச் செலவு அதி கரித்து, உள்நாட்டில் அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உல களாவிய நிச்சயமற்றத் தன்மை யால் அன்னிய முதலீடுகள் வெளி யேறுவது இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் சரிவுக்குள்ளாக்குவதுடன், கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தாங்குவதற்கு அரசாங்கம் கூடு தல் மானியம் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள் ளது. இது நாட்டின் நிதிப் பற்றாக் குறையை அதிகரித்து அரசாங்கத் தின் பொருளாதாரத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும்.  அந்நியச் செலாவணி- பாதுகாப்பு அச்சங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணி யாற்றி வரும் லட்சக்கணக்கான இந்தி யர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வரும் அந்நியச் செலாவணி ஆகியவை தற்போது கேள்விக்குறியாகி யுள்ளன. போரின் தீவிரம் அதி கரிக்கும் போது, அங்கிருந்து இந்தி யர்களைப் பாதுகாப்பாக வெளி யேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட லாம். இது இந்தியாவின் ஒட்டு மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உள்நாட்டு வேலைவாய்ப்புச் சந்தையிலும் அழுத்தத்தை உருவாக்கும். இந்தப் போர் நீண்ட காலம் தொடர்ந்தால், இந்தியாவின் வளர்ந்து வரும் உற்பத்தித் துறை மற்றும் நிதி மேலாண்மை ஆகிய இரண்டும் மீள முடியாத நெருக்கடியைச் சந்திக்கும் எனத் தற்போதைய சூழல் எச்சரிக் கிறது. ஆதாரம்: புளூம்பெர்க் (Bloomberg), மார்ச் 5, 2026