tamilnadu

img

அறிவு தான் அழகு; படிப்பு தான் அணிகலன்! மகளிர் கல்லூரியில் முதல்வர் பேச்சு

அறிவு தான் அழகு; படிப்பு தான் அணிகலன்! மகளிர் கல்லூரியில் முதல்வர் பேச்சு

சென்னை, பிப். 10 - “மகளிர்க்கு அறிவு தான் உண்மையான அழகு; படிப்பு தான் உண்மையான அணி கலன்!” என கல்லூரி மாணவியர் மத்தி யில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்தார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, செவ்வாய்க்கிழமையன்று பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது முதல்வர் பேசியிருப்பதாவது: பெண்கள் என்றாலே அழகு தான். அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவு தான் உண்மையான அழகு. படிப்பு தான் ஒரு பெண்ணிற்கு உண்மையான அணிகலன். போட்டி நிறைந்த இந்த உலகில் நிலைத்து நிற்க, ஒரு டிகிரி படித்தால் போதாது. வேலைக்கே போனாலும் உங்களுக்கு ஆர்வம் இருக்கக் கூடிய துறையில், ஆராய்ச்சி படிப்பு வரை தொடர்ந்து படிக்க வேண்டும். வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது, கடினமாக உழைக்க வேண்டும்.  குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர்கள் தங்கள் பொருள், உழைப்பு எல்லாம் செலவிடுகின்றனர். ஆனால்,  வெளிநாடுகளில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் இளைஞர்கள் அவர்களே தங்களின் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வதுதான் கலாச்சாரம். பெண் முன்னேறினால் ஒரு தலை முறையே முன்னேறும். இங்குள்ள மாணவி யர் படித்து நல்ல வேலைக்கு சென்றால், ஒரு தலைமுறையே முன்னேறும். உங்கள் வளர்ச்சியில் நான் உறுதுணையாக இருப்பேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவியர் அதிக பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி  சேர்க்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தால் 8 லட்சம் மாணவியர் பயனடைந்துள்ளனர். மாணவியர் படித்து வாழ்க்கையில் முன்னேறினால், அதுதான் அவர்கள் எனக்குத் தெரிவிக்கும் நன்றியாக இருக்கும்.  இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள் ளார்.