சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த கர்நாடக அரசு
தர்மஸ்தலா கோவில் கொலை சம்பவம்
கர்நாடக மாநிலம் மங்களூரு அரு கேயுள்ள தர்மஸ்தலாவில் அமைந்துள்ளது. இந்த கோவில் “ஜெயின் தர்மாதிகாரி மற்றும் பாஜக ஆத ரவுடன் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரேந்திர ஹெக்டேவால்” நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற் பட்ட பெண்கள், மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கொடூர மான முறையில் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டுள்ள தாக வெளியாகியது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புல னாய்வு குழுவை அமைத்து உத்தரவிட் டுள்ளது. டிஜிபி பிரோனாப் கொகந்தி தலைமையிலான இந்த குழுவில் காவல் துறை டிஐஜி எம்.என்.அனுசேத், டிசிபி சௌமிய லதா, எஸ்பி ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இனி மேற்கண்ட வழக்கின் முழு விசார ணையை இக்குழு மேற்கொண்டு அர சுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.