tamilnadu

img

ச.தமிழ்ச்செல்வன் ‘பாட்டாளிகளின் படைப்பாளி’ நூல் வெளியீட்டு விழாவில் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு!

ச.தமிழ்ச்செல்வன் ‘பாட்டாளிகளின் படைப்பாளி’  நூல் வெளியீட்டு விழாவில் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு!

திருவாரூர், பிப். 14 - திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டியில், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘திருப்பிய டித்த வரலாறு’ நூல் வெளியீட்டு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை மாலை நடை பெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் வரவேற்றார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன் நூலினை வெளியிட, திரைப்படக் கலைஞர் ரோகிணி முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் நூலை அறிமுகம் செய்து பேசிய கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பாட்டாளி வர்க்கப் போராட்ட வரலாற்றை இந்நூல் ஆவணப்படுத்தியுள்ள விதம் குறித்து விளக்கினார். தொடர்ந்து மதிப்புரை வழங்கிய கே.பால கிருஷ்ணன், நூல் ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வனை ‘பாட்டாளிகளின் படைப்பாளி’ எனக் குறிப்பிட்டுச் சிறப்பித்தார். முன்னதாக, எம்எல்ஏ-க்கள் நாகை  வி.பி.மாலி, க.மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொ துச்செயலாளர் சாமி. நடராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்த லிங்கம், தமுஎகச மாநிலப் பொ துச்செயலாளர் களப்பிரன் உள்ளிட் டோர் வாழ்த்துரை வழங்கினர். 1964 முதல் நடந்த போராட் டங்களை ஆவணப்படுத்த உதவிய மூத்த தோழர் எஸ். சேகர், முனைவர் ஜீ. வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌர விக்கப்பட்டது. நிறைவுரையாற்றிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சி வரலாற்றை அறிய ஒவ்வொரு தோழரும் இந்நூலை வாசிக்க வேண்டும் என வலியுறுத்தினார். விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமு வேல்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் வி. மாரிமுத்து, சின்னை. பாண்டியன், பி. சீனிவாசன் மற்றும் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர். ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ் நன்றி கூறினார்.