பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்படும் மகாராஷ்டிராவில், 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவீதமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள். இந்த மாநிலம் மும்பையில் ஆடம்பரமான சாலைகளை கட்டுவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது.
நையாண்டி கலைஞர் குணால் கம்ரா
ஞானேஷ் குமாரை நேபாளத்திற்கு அனுப்புங்கள், பாஜக அங்கும் ஆட்சி அமைத்து விடும். ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக இந்தியா உள்ளது.
திரிணாமுல் எம்.பி. சாகேத் கோகலே
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இரு கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைப் பெற்றது எப்படி?இதற்கான பதில் ஞானேஷ் குமாருக்கு மட்டுமே தெரியும்.
பத்திரிகையாளர் துருவ் ரதி
மக்கள் தொகையில் பாதி பேர் இது ஒரு மோசடி தேர்தல் என்று அறிந்திருக்கும்போது வெற்றி பெறுவதில் என்ன மகிழ்ச்சி? ஞானேஷ் குமார் 2024 மார்ச் இல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு என்ன நடந்தது என்பது வரலாறு.‘
