tamilnadu

img

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்

நெடுஞ்சாலைத் துறை சாலைப்  பணியாளர்கள் நூதனப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.11- 
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மேல் முறையீட்டினை திரும்ப பெற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்களன்று மன்னார்புரத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் கண்ணில் கருப்பு துணிக்கட்டி, நீதிதராசு கையிலேந்தி கும்மியடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்திற்கு, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க கோட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் சிவசங்கர், சாலை ஆய்வாளர்கள் சங்க சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோரிக்கைகளை விளக்கி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க இணைச் செயலாளர் ரமேஷ் பேசினார். மாநில துணைத் தலைவர் மகேந்திரன் உரையாற்றினார். 
இதில் துணைத் தலைவர்கள் மலர்மன்னன், பிரான்சிஸ், இணைச் செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோட்டப் பொருளாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.