அரசின் ஐந்தாண்டு சாதனை மலர் வெளியீடு
இராமநாதபுரம்,மார்ச் 6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 6 அன்று உங்க கனவை சொல் ்லுங்க திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு - 2030 கனவுகள் மெய்ப்படும்” என்ற நிகழ்ச்சி யில் ஐந்தாண்டு சாதனை கள் குறித்த சிறப்புரையாற் றும் நிகழ்ச்சி சென்னையிலி ருந்து காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. இதையொட்டி, இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில், இராமநாத புரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் , பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் செ.முரு கேசன் ஆகியோர் பங்கேற்று ஐந்தாண்டு சாதனை மலர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், மாவட்ட வனஉயிரின காப்பாளர் அகில்தம்பி , இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
