tamilnadu

img

தேசிய தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, செப்.29 - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்.22 முதல் 26 ஆம் தேதி  வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே யான தடகள விளையாட்டு போட்டி கள் நடைபெற்றன.  இப்போட்டியில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த தடகள  விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 17 வயதினருக்கான தடகள விளை யாட்டுப் பிரிவில் பவதாரணி 800 மீட்டர்,  1500 மீட்டர் 4x100 மீட்டர் ரிலே ஆகிய வற்றில் தங்கப் பதக்கங்களையும், 14 வயதினருக்கான விளையாட்டு பிரி வில் கீர்த்திகா 200 மீ, 400 மீ, 600 மீட்டர் ஆகியவற்றில் தங்கப்பதக்கமும், 4x100 ரிலே-யில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.  ஞாயிறன்று திருச்சி ரயில் நிலையம் வந்த இவர்களுக்கு பயிற்சியாளர், விளையாட்டு வீரர்கள், பெற்றோர், பல்வேறு சமூகநல அமைப்புகள் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் நுகர்வோர் பாது காப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், ரயில்வே துறை அலுவலக கண்காணிப் பாளரும் தேசிய தடகள விளை யாட்டு வீரருமான தமிழரசன், தடகள  பயிற்சியாளரும் அஞ்சல் துறை ஊழி யருமான முனியாண்டி, தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர், அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார், மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவர் ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.