தேர்தல் ஆணையமே எஸ்ஐஆரை கைவிடு! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
அரசியல் அமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை கைவிட தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செவ்வாயன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, மமக, தவாக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
