tamilnadu

2025 மார்சுக்குள் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்

சென்னை, நவ.6- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த  திட்டம் சென்னை மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம் -  பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித் தடங்களில் 118.9 கி.மீ.தூரத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதற்காக சுரங்கப்பாதைகள், உயர்மட்டபாதைகள், ரயில்  நிலையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு முதல் 2-ம் கட்ட மெட்ரோ  ரயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் பகுதி வாரி யாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. 2-ம் கட்ட திட்டத்துக்கான டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ ரயில் டெப் போவிடம் கடந்த அக்டோபரில் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு ரயில் அடுத்த மாதம் வர உள்ளது. இதன் தயாரிப்பு  பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள உற்பத்தி ஆலையில் நடந்து வருகிறது. ஓட்டுநர் இல்லாத மேலும் 9 ரயில்கள் அடுத்த ஆண்டு  மார்ச் மாதத்துக்குள் வர உள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையி, “முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் டிரைவர்களுடன் கூடிய 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ  ரயில் இயக்கப்படுகிறது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத் தில் டிரைவர் இல்லாத 3 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரயில் இயக் கப்பட உள்ளது. பயணிகளின் தேவையை பொருத்து அது  6 பெட்டிகளை கொண்டதாகமாற்றப்படும். டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதுவரை 50 சதவீத சோத னைகள் முடிந்துள்ளன. ரயிலை இயக்கும் போது எந்த பிரச்சனையும் எழவில்லை” என்றன.