tamilnadu

திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விருதுநகர் அருகே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விருதுநகர் அருகே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

விருதுநகர், பிப்.7- திமுக இளைஞரணி தென் மண்டல  நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே அமைந் துள்ள கலைஞர் திடலில் சனிக்கிழமை மாலை  பிரம்மாண்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்  தில் தமிழக முதல்வரும் திமுக தலைவரு மான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞ ரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். நிதி,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசு வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செய லாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செய லாளர்கள் பொன்முடி, கனிமொழி எம்.பி.,  திருச்சி சிவா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., அ.ராசா எம்.பி., அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, கே.ஆர்.பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலரும்  பங்கேற்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இது நிர்வாகிகள் சந்திப்பா அல்லது வெற்றி மாநாடா என எண்ணும் அளவிற்கு எழுச்சியுடன் நடைபெறுகிறது. திமுக இளைஞரணி ராணுவ அமைப்பைப் போல கட்டுப்பாடும், தலைமை உத்தரவு களை செயல்படுத்தும் திறனும் கொண்டது. கோவிட் காலத்தில் மக்கள் பணியில் முன்ன ணியில் இருந்தது இளைஞரணி” என்றார். சட்டமன்றத் தேர்தலில்  புதிய சாதனை படைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகை யில், “விருதுநகர் என்றாலே பெருந்தலை வர் காமராஜரும், அவரது மதிய உணவுத் திட்டமும் நினைவிற்கு வருகிறது. கடந்த கால அனுபவங்களைப் போலவே, 2026  சட்டமன்றத் தேர்தலிலும் புதிய சாதனையை  திமுக படைக்கும். இலக்கு – 200 தொகுதி களில் வெற்றி” என்றார். மேலும், “சமூகநீதி, மாநில சுயாட்சி, சுய மரியாதை, மொழி உணர்வு ஆகிய வையே திமுகவின் அடிப்படை கொள்கை கள். மும்மொழிக் கொள்கை என்ற பெய ரில் தாய்மொழியை அழிக்க நினைக்கும் முயற்சிகளை திமுக ஒருபோதும் அனு மதிக்காது. இளைஞர்கள் மொழிப்பற்று டனும், சிந்தனையுடனும் செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய நிதி யை வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய முதல்வர், “பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பூஜ்ஜியம் தான் கிடைத்தது. எனவே வரும் தேர்தலில் அவர்களுக்கும் அதே பூஜ்ஜியத்தை வழங்க வேண்டும்” என்றார். இளைஞர்கள் சமூக வலைதளங்களில் விழிப்புடன் செயல்பட்டு, திமுக அரசின் சாத னைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும், கடைசி நிமிடம் வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றும்  முதல்வர் அறிவுறுத்தினார்.