நாமக்கல், ஜூலை 19- நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி வெள்ளி யன்று நடைபெற்றது. 205 சந்தாக்கள் ஒப்ப டைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் பத்திரிகையாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறும் பொழுது, தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் கடந்த 10 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண்டு சந்தாக்களை பெறுவ தற்கான நிகழ்ச்சி எலச்சிபாளையத்தில் நடை பெற்றது. தீக்கதிர் நாளிதழ் சமரசமற்ற முறை யில் உழைப்பாளி மக்களுடைய குமுறல்க ளை, கோரிக்கைகளை பேசக்கூடிய ஒரு நாளிதழ் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பத்திரிகையை பாதுகாக்க வேண்டியது உழைப்பாளி மக்களுடைய கடமை என்கிற முறையில் தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர் கள், விவசாயிகள், அனைத்து கட்சி நண்பர்கள் இவர்கள் அனைவர் இடத்திலும் சந்தா சேர்ப்பு பணியில் தோழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். 50,000 பிரதிகளாக இதனை உயர்த்துவது என்ற நோக்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவின்படி செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதி மன்றம் குப்பம், அடை யாறு, பக்கிம்காம் கால்வாய் கரையோரத்தில் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் அடுத்த எட்டு வார காலத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற ஒரு தீர்ப்பை வழங்கியி ருக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் அது குடிசைகளை நோக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அமைந்திருக்கிறது. இதுவே நீர்நிலை களை ஆக்கிரமித்து,அல்லது ஆற்று கரை யோரங்களில் பெரும் கட்டிடங்களை எழுப்பி இருக்கக்கூடிய பொறியியல் கல்லூரிகள், பெரிய பெரிய நட்சத்திர விடுதிகள், இது போன்ற பெரிய மனிதர்களுக்கு எதிராக நீதி மன்றங்கள் தங்களுடைய குரலை ஒலிக்க மறுக்கிறார்கள் .சாதாரண ஏழை எளிய மக்கள் வேறு வழியே இல்லாமல் தான் நீர் நிலை களில் குடியிருக்கிறார்கள். நீர்நிலை புறம் போக்குகளில் குடியிருக்க வேண்டும் என்று திட்டமிட்டு யாரும் குடியேறுவதில்லை. வேறு எங்கேயுமே அவர்களால் இடம் வாங்கி குடி யிருப்புகளை அமைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் தான் வேறு வழி இல்லாமல் அங்கே குடியேறி இருக்கிறார்கள். இத்தகைய மக்களை அதிரடியாக வெளியேற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிடுகிறபோது, அந்த மக்கள் நிர்க்கதியாக வாழ வழி இல்லாத ஒரு நிலைமை என்பது ஏற்படுகிறது .ஆகவே இத்தகைய பிரச்சனைகளில் நீதிமன்றங்கள் ஏழை, எளிய மக்களுக்கு எதிரான தீர்ப்பளிப்பது என்பது இயற்கை நீதிக்கு புறம்பானது. இத்தகைய வழக்குகள், இத்தகைய பொதுநல வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகிற போது அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் மக்க ளின் பக்கம் நின்று வாதாடுவதற்கு பதிலாக, நீதிமன்றம் சொல்வதை அப்படியே ஏற்று நாங்கள் செயல்படுத்துகிறோம், என்கிற முறையில் நடந்து கொள்வது என்பது ஏற்பு டையதல்ல! எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்கள் அவர்களுடைய குடியி ருப்பு உரிமையை பாதுகாப்பது என்கிற முறை யில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறை இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.ஏற்கனவே தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு, ஜனநாயகத்திற்கு விரோதமானது, அரசியல் கட்சிகள் மற்றும் மற்ற அமைப்புகள் எல்லாம் துவங்குவதற்கும், மக்கள் அதிலே செய லாற்றுவதற்கும் அடிப்படை உரிமையை அரசியல் சாசனம் வழங்கியது. மூன்று நீதிபதி களின் தீர்ப்பு வருகிற வரை தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்று வதற்கு தடை விதித்து இருக்கிறது என்பது வரவேற்கத்தக்க நல்ல விஷயம். ஆனால் இது போன்ற விஷயங்களில் நீதிபதிகள் ஜனநாய கத்திற்கு விரோதமாகவும் அரசியல் கட்சி களின் உரிமைகளை பாதிக்கக் கூடிய வகையிலும் உத்தரவுகளை வெளியிடுவது என்பது ஏற்புடையது அல்ல. அதை எதிர்த்து தான், ஒரு நீடித்த சட்டப் போராட்டத்தை இந்த மூன்று மாத காலமாக கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இதன் விளை வாக அனைத்து கொடிக்கம்பங்களும் காப்பாற்றப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பிலும் கொடிக்கம்பங்கள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் ஆலயத்தில் பட்டியல் சாதி மக்கள், பழங்குடி மக்கள் நுழை வதை தடுக்கக்கூடிய நபர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற விஷ யங்களில் அதிகாரிகள் தாங்களாகவே முன் வந்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக எதற்காக மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுகிறீர்கள் என்கிற ஒரு அடிப்படை யான கேள்வியை நீதியரசர் அவர்கள் கேட்டி ருக்கிறார்கள். இது உண்மையிலேயே வரவேற் கத்தக்க தீர்ப்பு. ஏனென்று சொன்னால் வழிபாட்டு உரிமையை இந்திய அரசியல் சாசனம் இந்திய நாட்டு மக்களுக்கு வழங்கி இருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தான் நம்முடைய அரசியல் சாசனத்தின் அடிப்படை.
அந்த அடிப்படையில் எந்த ஒரு வழிபாட்டு இடத்திலேயும் அனைத்து சாதியை சார்ந்த மக்களும் வழிபாடு நடத்துவதற்கான உரிமை என்பது ஏற்கெனவே இருக்கின்றது.ஆனால் சில சாதிய மேலாதிக்க சக்திகள் இந்த வழிபாட்டு உரிமையை பட்டியல் சாதி மக்களுக்கு மறுப்ப தும், அது தொடர்பாக அதிகாரிகளும் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு பதிலாக சமாதான கூட்டம் என்கிற பெயரில் காலம் கடத்துவது, அல்லது நீதிமன்றத்தை நாட சொல்லி அறிவுறுத்துவது போன்ற வகையில் சட்டத்தை மீறி நடந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உயர்நீதிமன்றம் உள்ளாக்கி இருக்கிறது.ஆகவே இதற்கு பிறகாவது தமிழ்நாட்டில் அனைத்து வழிபாட்டு இடங்களிலும், அனைத்து சாதியையும் சார்ந்த மக்களும் வழிபாடு நடத்துகிற அந்த உரிமை யை தமிழ்நாடு அரசாங்கம் நிலைநிறுத்து வதற்கு முன்வர வேண்டும். அதை நிலை நிறுத்துவதற்கு மறுக்கிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, தமிழ்நாடு அரசாங்கம் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். மக்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம், இப்போது நடைபெறுகிறது. இதில் அரசு அதி காரிகள் இதுவரை தமிழ்நாடு அரசு நிறை வேற்றியுள்ள நலத்திட்டங்கள், எவையெல்லாம் மக்களுக்கு கிடைக்க வில்லை. மக்களின் கோரிக்கைகள் என் னென்ன நிலுவையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்கள். இந்த முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை குறை களை அதில் தெரிவிக்கிறார்கள். விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையான வேலை பளு, வருமானம் குறைவு இதன் கார ணமாக தங்களுடைய கிட்னியை விற்று தான் பிழைக்க வேண்டும் என்கிற அவல நிலைக்கு உள்ளாகி இருப்பது என்பது மிகுந்த வருத் தத்துக்குரிய ஒரு விஷயம்.
குறிப்பாக கந்துவட்டிக்காரர்களால் கடுமை யான சுரண்டலுக்கும் ,வட்டிக் கொடுமைக்கும் நம்முடைய விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே பல வெளிவந்திருக்கிறது. கந்துவட்டிக்காரர்களால் பாதிக்கப்பட்டது போல், கிட்னி ஏஜெண்டுகளால் இப்போது பொது மக்கள் ஏமாற்றப்படக்கூடிய ஒரு அவலநிலை தான் இன்றைக்கு வெளி வந்திருக்கிறது. இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசைத்தறி தொழிலை மேம்படுத்தவும் பாதுகாக்கவும், இதனை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கச் செய்வதும் வருமானத்தை பெருக்குவதும் தான் இந்த கிட்னி விற்பனை தடுப்பதற்கான ஒரே வழி. அதற்குரிய முறையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிட்னி விற்பனையில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய மருத்துவ மனைகளாக இருந்தாலும் அவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.