tamilnadu

img

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சிதம்பரம்  வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவிற்கு வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர்  வீனஸ் எஸ். குமார்  தலைமை தாங்கினார். பள்ளித் தாளாளர்  ரூபியால்ராணி, நிர்வாக இயக்குநர் . அருண், பள்ளித் தலைவர்  லியோனா அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . விழாவில் பண்டிதர் நேருவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கி வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாட்டை பள்ளி முதல்வர்  நரேந்திரன் மற்றும் நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா ஆகியோர்  ஒருங்கிணைத்திருந்தனர்.