பாடகி கே.பி.சுந்தராம்பாள் முழு உருவச் சிலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 8 - ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த “கொடுமுடி கோகிலம்” என அழைக்கப் படும் பாடகி மற்றும் நாடக நடிகையு மான மறைந்த கே.பி.சுந்தராம் பாளுக்கு அவர் பிறந்த ஊரான கொடு முடியில் உருச்சிலை அமைக்கப் பட்டது. இதனை, சர்வதேச மகளிர் தினத்தில் அவரது பெருமையை நினைவுகூரும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்தியாவிற்கே பெருமை சேர்ந்த கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்க முழுக்காரணம் முதல்வர்தான் என்றும், அதனை மகளிர் தினத்தில் திறந்ததில் மகிழ்ச்சி யும், பெருமையும் அடைவதாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். மேலும், பத்மஸ்ரீ சுந்தராம்பாளுக்கு உரிய காலத்தில் சிலை அமைத்த முதல்வருக்கு, அவரது உறவினரும் ஓய்வுபெற்ற நீதி பதியுமான வாசுகி நன்றி தெரிவித்து கொண்டார். 1969 இல் பத்மஸ்ரீ கே.பி சுந்த ராம்பாள் கொடுமுடியில் கட்டிய திரை யரங்கு திறப்பு விழாவிற்கு அப்போ தைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் அப்போதைய திரை நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை அழைத்து வந்துள்ளார். 1935 இல் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றது அக்காலத்தில் பெரிதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்எல்ஏக்கள் வி.சி சந்திரகுமார், கே.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
