tamilnadu

img

நல்லாட்சிக்கும் ஊழல் ஒழிப்பிற்கும் புத்தகங்கள் சிறந்த ஆயுதங்கள்!

நல்லாட்சிக்கும் ஊழல் ஒழிப்பிற்கும் புத்தகங்கள் சிறந்த ஆயுதங்கள்! 

தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் பேச்சு

கிருஷ்ணகிரி, ஜூலை 20- கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும் தமிழ்்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 14ஆவது புத்தகத் திருவிழா ஓசூரில் நடைபெற்று வருகிறது.  இதில் எட்டாம் நாள் நிகழ்வில் தமிழ் நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ.ராம ராஜ் கலந்துகொண்டு புத்தக வாசிப்பு நல் லாட்சிக்கும், ஊழல் ஒழிப்புக்கும் சிறந்த ஆயுதம் என்று வலியுறுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் பேச்சு மொழியை எழுத்து வடிவத் திற்கு கொண்டு வந்து களிமண்ணில் எழுதி அதனை நெருப்பில் உலர்த்தி பாதிப்புகள் உருவாக்கத்தை தொடக்கியுள்ளார்கள். இதன் பின்னர் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் ஒரு வகையான செடியின் கீற்றுக்களை ஒட்டவைத்து அதில் எழுத்து வடி வத்தை பதித்துள்ளனர். இரண்டாம் நூற்றா ண்டில் அதாவது சுமார் 1800 ஆண்டுகளுக்கு  முன்னர் எழுத்தை அச்சிட மரக்கட்டைகளான பிளாக்குகளை சீனர்கள் உபயோகிக்க தொடங்கினர். மூன்றாம் நூற்றாண்டில், அதாவது சுமார் 1,700 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர் அச்சிடுதல் என்பது முழுமையான ஒரு வேலையாக உருவானது.  டிஜிட்டல் யுகத்தில் புத்தகங்கள் கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏராள மான புத்தகங்கள் உலகம் முழுவதும் வெளி வந்துள்ளன. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் உலகம் முழுவதும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வெளி வருகின்றன. தனித்துவமான புத்தகங்கள் நாளிதழ்கள் வார இதழ்கள் மாத இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் என்று புத்த கங்களை பல்வேறு வகைகளாக பிரிக்க லாம். புத்தகம் போதிக்காத அறிவு சார்ந்த துறை அல்லது பொழுதுபோக்கு சார்ந்த துறை எதுவும் கிடையாது. தனித்துவமான  17 கோடி புத்தகங்கள் 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 17 கோடிக்கும் அதிகமான தனித்துவமான புத்தகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட் டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 22 லட்சம் முதல் 24 லட்சம் அச்சுப் புத்தகங்கள்,  மின்புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் உள்ளிட்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்படு கிறது.  இதில். 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் வரை புதிய தலைப்புகளை வெளியிடுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5,000 புதிய தமிழ் புத்தகங்களும் ஆயிரம் புத்தகங்களின் மறு பதிப்புகளும் வெளியிடப் படுகின்றன. பள்ளியில் காலடி எடுத்து வைத்தது முதல் இறக்கும் வரை மனிதனுக்கு புத்தகம் சிறந்த நண்பனாகும். வாசிப்பை பழக்கமாக்கிக்கொள்வோம் புத்தக வாசிப்பை எப்போதும் ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் தொடர்ந்து நீங்கள் படிக்கும் போது எளிதாக சிறந்த புத்தகங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை புத்தக வாசிப்பிற்கு செல விட வேண்டும். ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறை யில் படிப்பது மற்றும் வேலை செய்வதை பத்தாயிரம் மணி நேரம் செய்தால் மட்டுமே  அந்தத் துறையில் உலகம் போற்றும் நிபுண ராக மாற முடியும். தொடக்கத்தில் உங்களை  யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு துறையில் நிபுணராக உருவானால் உங்களைப் பற்றி கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணையதளங்களில் தேடுவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.  புத்தக வாசிப்பு முக்கிய பங்களிப்பு  நீங்கள் என்னவாக வேண்டும் என்று உங்களது இலக்கை முடிவு செய்யுங்கள். புத்தக வாசிப்பு, கடின உழைப்பு, நேர நிர்வாகம், தொடர்ந்து பணியாற்றுதல்,  உங்களது சிந்தனைகள் போன்ற உத்திகள் உங்களது செயல் திட்டத்திற்கு மிக அவசிய மானவை. உடல் நலத்தையும் மனவளத்தை யும் சீராக பராமரித்துக் கொண்டு உங்க ளது திட்டங்களுக்காக தொடர்ந்து பணி யாற்றினால் வெற்றி உங்கள் கைகளுக்கு வந்து அடையும். எப்போதும் வெற்றியா ளர்களுக்கு விடுமுறை கிடையாது. வெற்றி  பெறுவதற்கும் உங்கள் திட்டங்களின் படி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். வெற்றி  பெற்ற பின்னரும் வெற்றியை தக்க வைத்துக்  கொள்ள தொடர்ந்து பணியாற்றுவதில் புத்தக வாசிப்பும் முக்கியமான பங்களிக்கிறது.  நாட்டை பற்றி தெரிந்துகொள்வோம்  புத்தகங்களை நாளிதழ்களை பருவ இதழ்களை இணையத்தில் தகவல்களை தொடர்ந்து படிப்பதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பையும் நாட்டின் பொதுச் சட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். வாசிப்பின் மூலம் அரசின் ஒவ்வொரு துறை கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். வாசிப்பின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் மற்றும் அரசு செல விடும் தொகை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியும். வாசிப்பின் மூலம் நேர்முக வரிகள் மறைமுக வரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலமாக லாபம் உள்ளிட்ட வற்றின் மூலமாக அரசுக்கு கிடைக்கும் மக்களின் பணமானது சரியாக செய்யப்படு கிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடி யும்.  மக்களாட்சி நாடுகளுக்கு நல்லாட் சியை தரவும் ஊழலை ஒழிக்கவும் தனித்து வமான புத்தகங்களும் நாளிதழ்களும் பருவ இதழ்களும் இணையங்களும் சிறந்த கருவிகள் ஆகும். இந்த கருவிகளை வாசிப்பு பழக்கத்தின் மூலமே பயன்படுத்த முடியும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். அனைவரும் வாசிப்பு பழக்கத்தை கடைபிடிப்போம் வாசிப்பு பழக்கத்தின் அவசியத்தை நாட்டு மக்கள் அனைவருக்கும் பரப்புவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.