tamilnadu

img

எஸ்ஐஆர் மூலம் வெற்றி பெறலாம் என்ற பாஜகவின் எண்ணம் பலிக்காது!

எஸ்ஐஆர் மூலம் வெற்றி பெறலாம் என்ற  பாஜகவின் எண்ணம் பலிக்காது!

சிவகங்கை, நவ. 15 - சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி யில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனிக்கிழமை (நவ. 15) அன்று திறந்து வைத்தார். பேருந்து நிலையம் அருகே கலை ஞர் அரங்கம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன் னாள் சட்ட அமைச்சர் மாதவன் ஆகி யோரது சிலைகளையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து உரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை எஸ்ஐஆர் மூலம் நீக்கி விட்டால் வெற்றிபெற்று விடலாம் என பாஜக கணக்கு போடுகிறது. ஆனால், தமிழகத்தில் இது பலிக்காது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இந்தியாவின் ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்று நாடே பாராட்டு கிறது. ஆனால் அதிமுகவை, பாஜகவின் ‘நம்பர் ஒன் அடிமைகள்’ என்று ஒட்டு மொத்த இந்தியாவும் கேலி பேசுகிறது. இப்படிப்பட்ட அதிமுக மற்றும் பாசிச பாஜகவை தோற்கடித்து மக்கள் விரட்ட வேண்டும். அடுத்த 4 மாதங்கள் கடு மையாக உழைத்து திமுக கூட்டணியை 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் தமிழக நிதி, சுற்றுச் சூழல்- காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆ. தமிழரசி ரவிக்குமார், காதர் பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் கா.பொற்கொடி, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் ந. அம்பலமுத்து, துணைத் தலைவர் பி. செந்தில்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.