மணிப்பூரில் சிஆர்பிஎப் தாக்குத லில் குக்கி பழங்குடியின மக்கள் 11 பேர் பலியாகினர். அதே போல காணாமல் போன மெய்டெய் பிரிவைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மே லும் ஆயுதப்படை கள் சட்டம் அமல் போன்ற சம்பவங்க ளால் மணிப்பூர் மாநி லத்தில் மீண்டும் வன்முறை சம்பவங் கள் தலைதூக்கியுள்ளன. இதுபோக மெய்டெய் பிரிவைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து காணாமல் போவதால் மணிப்பூரில் நிலைமை மோசமாகி யுள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவுடன் கூடிய மினி ஊரடங்கு, இணையதள சேவை துண்டிப்பு என பல்வேறு கட்டுப்பாடுகள், கூடுதல் குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற் கொண்டாலும் மணிப்பூரில் இன்னும் வன்முறைச் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை தொடங்கிய போது மூடப்பட்ட பள்ளிகள் 13 நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப் பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் இன்னும் குறையாத சூழலில் பள்ளிகளை திறந்து குழந்தைகளின் உயிரோடு விளை யாடும் மணிப்பூர் பாஜக அரசின் செய லுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.