மக்கள் நல நிதியை பாதியாக சுருக்கிய பாஜக மாநில அரசுகளே அதிகம் நிதி ஒதுக்குகின்றன
புதுதில்லி மக்களின் சமூக நலத் திட்டங்க ளுக்கான நிதி ஒதுக்கீடு களை மாநில அரசுகளே அதிகம் ஒதுக்குகின்றன, ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுகளில் நிதி களை பாதியாக வெட்டி சுருக்கி யுள்ளது என ஆய்வுப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பொருளாதார வல்லுநர்களான சி.பி. சந்திரசேகர், ஜெயதி கோஷ் ஆகிய இருவரும் பிசினஸ்லைன் பத்திரிகையில் எழுதிய ஆய்வுக்கட் டுரையில் புள்ளி விவரங்களுடன் இதனை தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வில் மாநில அரசுகள் அதிக நிதி சுமையைத் தாங்கிக் கொண்டு மக்க ளின் அடிப்படைத் தேவைகளுக் காகவும் அதிகம் செலவு செய்கின் றன. ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதிக நலத்திட்டங்களை செய்வ தைப் போல காட்டிக்கொண்டு நிதி களை வெட்டும் வேலையைச் செய் கிறது என்பது அம்பலமாகி யுள்ளது. ஆய்வில் முக்கியத் தகவல்கள் 2014-15 ஆம் ஆண்டிலிருந்து, ஒன்றிய அரசின் மக்கள் நலத்திட் டங்களுக்கான செலவினப் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைவாகவே இருந்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மக்கள் நலத் திட்டங்களுக்காக மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 8.5 சதவீதம் செலவிடப்பட்ட நிலையில், மோடி யின் 11 ஆண்டுகால ஆட்சியில் 5.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் மாநில அரசுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது செய்த செலவு களை விட 4 மடங்கும், பாஜக அரசை விட 8 மடங்கும் அதிகமாக மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவு செய்துள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத் தில் மக்கள் நலத்திட்டங்களில் தனி நபருக்கான நிதி ஒதுக்கீடுகளும் செலவுகளும் கிட்டத்தட்ட நான்கு மடங்கு (397 சதவீதம்) அதிகரித்தது. ஆனால் மோடி அரசின் முதல் பத்து ஆண்டுகால ஆட்சியில் தனிநபர் சமூகச் செலவினம் பண மதிப்பில் (Nominal) வெறும் முக்கால் பங்கு (76 சதவீதம்) மட்டுமே அதிகரித் துள்ளது எனவும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இது இந்தியாவில் உருவாகி யுள்ள பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகும். அதே போல ஒன்றிய அரசின் மக்கள் நலத் திட்டங்களினால் மக்களின் வாங் கும் சக்தி உயரவில்லை. அதே நேரத்தில் மாநில அரசு களின் (குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ) மக்கள் நலத் திட்டங்களுக்கான சமூகச் செலவினப் பங்கு இந்த பத்தாண்டு களில் தொடர்ந்து அதிகரித்துள் ளது. ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி களின் மூலமாக லட்சக்கணக்கில் பணத்தை குவிக்கும் பாஜக அரசு மாநிலங்களுக்கு கொடுக்க வேண் டிய போதிய அளவிலான நிதிப் பங்கீடுகளை கொடுக்க மறுத்து வரும் போதும் மாநில அரசுகள் இந்த மக்கள் நலத்திட்டங்களை அமலாக்கியுள்ளன. மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டிவந்த அதே வேளையில் அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறு வனங்களின் பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது குறிப்பி டத்தக்கது.