ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களை ‘இலவசம்’ என்பதா? ரூ. 16 லட்சம் கோடி கார்ப்பரேட் தள்ளுபடி குறித்து நீதிபதிகள் மௌனம் ஏன்?
பெ. சண்முகம் ஆவேசம் கோவை, பிப். 20- “ஏழை எளிய மக்க ளுக்கு வழங்கப்படும் நலத்திட் டங்களை ‘இலவசம்’ என்று விமர்சிக்கும் நீதிபதிகள், பெரும் முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தார்கள்?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் காட்ட மாகக் கேள்வி எழுப்பினார். கோவை பெரியநாய க்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளைச் செய லாளர் தோழர் மெம்பர் நாராயணன் நினைவாக, ஒன்றிய குழு அலுவலகத் திறப்பு விழா மற்றும் தேர்தல் நிதி வழங்கும் பொதுக் கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. எல்.எம்.டபிள்யூ பகுதியில் அமைந்துள்ள ‘மெம்பர் நாராயணன் நினை வகத்தை’ பெ. சண்முகம் திறந்து வைத்தார். முன்ன தாக, மூத்த தலைவர் ந.பாலமூர்த்தி மற்றும் சிஐ டியு மாவட்டத் தலைவர் கேச வமணி ஆகியோர் கொடி களை ஏற்றி வைத்தனர். கல்வெட்டை மாவட்டச் செய லாளர் சி. பத்மநாபனும், மெம்பர் நாராயணனின் உருவப் படத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் திறந்து வைத்தனர். ‘அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்’ தொடர்ந்து ஜோதி புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், ஒன்றியக் குழு சார்பில் திரட்டப்பட்ட 4 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்டு பெ. சண்முகம் உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், மத மாற்றமே காரணம் என அண்ணாமலை பரப்பிய பொய்ப் பிரச்சாரம் சிபிஐ அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. தமி ழகத்தில் மதப் பகைமை யை உருவாக்க முயன்ற அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அரசு அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தி னார். ஈஷா மையம் மற்றும் கார்ப்பரேட் சதி ஈஷா யோகா மையத் திற்குள் தனியாகச் சுடுகாடு அமைத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தி ருப்பது அதிர்ச்சியளிப்ப தாகக் குறிப்பிட்ட அவர், ஏற்க னவே அங்கு பல சந்தேக மரணங்கள் நிகழ்ந்துள்ள சூழலில், இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ(எம்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்றார். மேலும், அமெரிக்காவுட னான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் முது கெலும்பை உடைக்கும் செயல் என்று சாடிய அவர், “இது இந்தியப் பொருட் களுக்கு 18 சதவீத வரி விதிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அழிக்கும் கார்ப்பரேட் சூழ்ச்சியாகும். மத்திய பட்ஜெட்டில் விவ சாயிகளுக்கோ, தொழி லாளர்களுக்கோ எந்தப் பய னும் இல்லை. ஏழைகளுக் கான நலத்திட்டங்களை ‘இலவசம்’ என விமர்சிப்ப வர்கள், பெரும் முதலாளி களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்டதை ஏன் கேள்வி கேட்கவில்லை?” என ஆவேசமாக வினவினார். பாரதியார் பல்கலைக் கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இக்கூட்டத்திற்குப் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் நவ.சிவராஜன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் எம். கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. அஜய்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
