tamilnadu

img

சீமானை கண்டித்து அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பெண்களையும், பெண்கள் அமைப்புகளை இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கண்டித்து அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில்  வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே வெள்ளியன்று (ஜூலை 18)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநில பொருளாளர் பிரமிளா, வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.கோடீஸ்வரி, செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, கண்ணகி, சாந்தி, ஜிவசுந்தரி (தேசிய மாதர் சம்மேளனம்), வசுமதி (மநுதி), செல்லம்மாள் (சுயாட்சி இயக்கம்) பேராசிரியர் சுந்தரவள்ளி, மூத்த பத்திரிகையாளர் குமரேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.