tamilnadu

img

காற்று மாசு தில்லி பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு

காற்று மாசு தில்லி பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு

தில்லியில் சராசரி காற்றின் தரக்  குறியீடு 362லிருந்து செவ்வாய்க் கிழமை காலை 425 ஆக கடுமை யாக உயர்ந்ததை அடுத்து, அம்மாநிலத் தில் உள்ள பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை கலப்பின முறையில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில கல்வி  இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில், “அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் உள்பட ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளைக் கலப் பின முறையில் பாடங்களை நடத்த வேண்  டும்” என உத்தரவிட்டுள்ளது.  கலப்பின (நேரடி மற்றும் ஆன்  லைன்) முறையில் சாத்தியமான இடங்க ளில் ஆன்லைனிலும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம். அதாவது சூழ்  நிலைக்கு ஏற்ப வகுப்புகள் நடத்தப்படும்.  இது உடனடியாக நடைமுறைக்கு வரும்  என்றும் அறிவுறுத்தல் வெளியாகி உள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.