tamilnadu

img

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்த வர்க்கப் போராளி - ஐவி.நாகராஜன்

அடிமைகளாய் வாழ்ந்த மக்கள் மத்தியில் மிகப் பெரும் எழுச்சியை உருவாக்கியவர். பி.எஸ்.ஆர். என அன்புடன் அழைக்கப் பட்ட தோழர் பி.சீனிவாசராவ் நமக்காக எவருமில்லை என்று எண்ணியிருந்த அந்த மக்களின் சக்தியை அவர் களுக்கே உணரச்செய்தவர்தான் தோழர் பி.எஸ்.ஆர் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக கிடந்த உழைப்பாளி மக்களை பொருளாதார சுரண்டலுக்குகெதிராகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒருங்கி ணைத்து திறம்பட நடத்தி தஞ்சை மண்ணில் செங்கொடி இயக்கத்தை வலுவாக கட்டியவர் தான் தோழர் பி.எஸ். ஆர். கிராம புறங்களில் ஏழை விவசாயி களையும், விவசாயத் தொழிலாளர் களையும், பணக்கார விவசாயிகளில் ஒரு பகுதியினரையும் வென்றெடுத்து அவர்களை ஒரே அணியில் திரட்டி சாதிய ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்கு முறை ஆகிய இரண்டுக்கும் எதிரான போராட்டத்தை விடாப்பிடியாக நடத்தி யவர்தான் தோழர் பி.எஸ்.ஆர்.

கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் உள்ள இனைப்பை மிகத்துல்லியமாக ஆராய்ந்து முதலில் தெரிவித்த மாமேதை காரல்மார்க்ஸ் அவர்களின் வழிக்காட்டலில் நின்று உறுதியாக போரடியவர்தான் தோழர் பி.எஸ்.ஆர்.  பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்தை யும், கிராமப்புற ஏழைமக்களின் பொரு ளாதார சமூக பிரச்சனைகளுக்கான போராட்டங்களையும் கவனமாக இணைத்து நடத்திய இடங்களில் செங்கொடித் தளங்கள் உருவானது என்று மாபெரும் தலைவர் சுர்ஜித் கூறு வார். அதன் அடிப்படையில்தான் கீழ தஞ்சையில் இன்றைக்கும் செங்கொடி தளம் வலுவாக உள்ளது. இதற்கு அடித் தளம் இட்டவர்தான் தோழர் பி.சீனிவா சராவ்.  நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது நிலபிரபுக்கள், பிரிட்டிஷ்காரர்களின் பாதந்தாங்கிகளாக இருந்தார்கள். கிராம பஞ்சாயத்து தலைவர்களாக, கூட்டுறவு அமைப்புகளை கட்டுப் படுத்துபவர்களாக  ஆதிக்கசக்திகளே தொடர்ந்தன. இவைகளுக்கு எதிராக பி.எஸ்.ஆர் உறுதியாக நின்று போரா டியதன் விளைவாக சில மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. 

பி.எஸ்.ஆருக்கு மிகச்சிறந்த அங்கீகாரமாக கலைஞர் ஆட்சிக் காலத்தில்  திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த முயற்சியில் மன்னார்குடி சாலையில் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் வெண்கல உருவச் சிலை அமைக்கப்பட்டு மறைந்த விடுதலை போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்களால் திறந்துவைக்கப்பட்டு ஆண்டு தோறும் நினைவு தின நிகழ்ச்சி எழுச்சியோடு நினைவு கூரப்பட்டு வருகிறது.  1961-ல் பி.எஸ்.ஆர். நிலச் சீர்திருத்தம் குறித்த விவசாயக் கூலி களின் தீரமிக்க போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது செப்டம்பர் 30ஆம் தேதி மரணமடைந்தார்.  அவர்  தனது 54 ஆண்டு கால வாழ்வின் பெரும் பகுதியை நாட்டின் விடுதலைக்கும் உழைக்கும் அடித்தட்டு மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கும் செல விட்டவர்.  அவரது உடல் அவர் உழைத்த மண்ணிலேயே திருத்துறைப்பூண்டி முள்ளி ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.  பி.எஸ்.ஆர் துவக்கிய அந்த பய ணத்தை நாம் சரியாக புரிந்து கொண் டால்தான் தமிழக அரசியல் களத்தில் அடிப்படையான மாற்றங்களை உரு வாக்க முடியும். கிழக்கு தஞ்சை மாவட்டத் தில் செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டங்களும், அடைந்த வெற்றி களும் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்திய நாட்டிற்கே ஒரு பாடமாக விளங்குகிறது. 

2024 செப்டம்பர் 30  தோழர் பி.சீனிவாசராவ்  63-ஆம் ஆண்டு நினைவு தினம்