இயற்கைப் பேரிடர்களால் கடந்த 30 ஆண்டுகளில் 80 ஆயிரம் இந்தியர் பலி
பிரேசில் நாட்டின் பெலிம் நகரில் நடை பெற்று வரும் 30 ஆவது காலநிலை மாநாட்டில் (COP 30) ஜெர்மன் வாட்ச் என்ற சுற்றுச்சூழல் ஆய்வு நிறு வனம், ‘பருவநிலை அபாய குறியீடு 2026’ எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்தியா சந் தித்த பாதிப்புகள் பற்றியும் குறிப்பிடப்பட் டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இயற் கைப் பேரிடர்கள் அதிகம் பாதித்த நாடு கள் பட்டியலில் முதலில் டொமினிகன் குடியரசு உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைதி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகர குவா நாடுகளும், 9 ஆவது இடத்தில் இந்தி யாவும், 10 ஆவது இடத்தில் பஹாமாஸ் நாடும் உள்ளன. இந்தியாவில் மட்டும் கடந்த 30 ஆண்டு களில் 430 இயற்கைப் பேரிடர்களில் சிக்கி 80,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. 1998 இல் குஜராத்தில் ஏற்பட்ட புயல், 1999 இல் ஒடிசாவில் ஏற்பட்ட சூப்பர் புயல், 2013 இல் உத்தரகண்ட் வெள்ளப் பாதிப்பு உள்ளிட்டவை அதிக உயிரி ழப்புகளை ஏற்படுத்திய சம்பவங்களாக பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் குஜராத், மகாராஷ்டிரா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.