காஷ்மீரில் ராணுவத்தினரே மக்களை துன்புறுத்துகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் தலைமைச்செயலாளர் மூசா ரசா குற்றம் சாட்டி உள்ளார்.
காஷ்மீரின் முன்னாள் தலைமை செயலாளர் மூசாரசா தனது பணிக்காலம் தொடங்கி தற்போது வரையிலான நிகழ்வுகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் காஷ்மீரில் ராணுவத்தினரே அதிக அளவு அதிகாரத்தில் இருப்பதால் மக்களை துன்புறுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது
பல மாநிலங்களில் காவல்துறையின் அதிகப்படியான அதிகாரம் கிடைத்தால் மக்களிடம் கடுமையாக நடந்து கொள்வது இயற்கை. இது ராணுவத்தினருக்கும் பொருந்தும். காஷ்மீரில் ஏஎப்எஸ்பிஏ அமலானதில் இருந்து ராணுவத்தினர் மக்கள் மீது அடக்குமுறையை கையாள்கின்றனர். இதை என் ஓய்வுக்கு பின் பகல்காமிர்க்கு சென்றபோது ராணுவத்தினரின் அத்துமீறலை நானே பார்த்திருக்கிறேன் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டி உள்ளார்.