ஈரோடு, ஜூலை 10- ஈரோட்டில் ”விபத்தில்லா நாள் “ திங்களன்று அனு சரிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்கும், தலை கவசம், சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பதின் அவ சியத்தை வலியுறுத்தியும் காவல்துறை, போக்கு வரத்து துறை, தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஈரோடு நகரம், பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, அந்தியூர் ஆகிய இடங்களில் முக்கிய போக்குவரத்து நிறைந்த பகுதிகளை தேர்ந்தெடுத்து ”ஹெல்மெட் ஜோன் ”என்ற திட்டம் அறிமுகப்படுத்தி தற்சமயம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது விபத்துக்களை குறைப்பதற் கும், மாவட்டத்தில் விபத்துக்கள் இல்லாமல் செய்வ தற்கும் வாரத்தில் ஒரு நாள் அதாவது “திங்கள் கிழமை ”விபத்தில்லா நாள் “என்ற திட்டம் திங்களன்று அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாகன ஓட்டி களும், பொதுமக்களும் சாலை விதிகளை மதித்து விபத்தில்லாத பயணத்தை மேற்கொள்வோம் என்ற உறுதி மொழியினை ஒவ்வொறு திங்கட்கிழமையிலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத் தப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது டன், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியதாக 511 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனம் இயக்கியதாக 151 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. திங்களன்று மாவட்டத்தில் விபத்தில்லா நாள் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக அன்று எவ்வித விபத்தும் மாவட்டத்தில் நடைபெறவில்லை. வாகன ஓட்டிகள் இதேபோல் ஒவ்வொரு நாளும் சாலையில் பயணிக்கும் போது சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றி ஈரோடு மாவட்டத்தினை விபத்தில்லாத மாவட்டம் என்ற நிலையை உரு வாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.