விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வு பாத்திரத் தொழிலாளர்கள் கோரிக்கை
திருப்பூர், நவ.12- டிசம்பர் மாதம் பாத்திரத் தொழிலாளர்க ளுக்கான சம்பள ஒப்பந்தம் முடிய உள்ள நிலையில், தற்போதுள்ள விலைவாசி உயர் வுக்கு ஏற்ப சம்பள ஒப்பந்தம் போட வேண் டும் என எதிர்பார்ப்பதாக பாத்திரத் தொழி லாளர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகர் வடக்கு பகுதியில் பாத் திர தயாரிப்பு முக்கிய தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக அனுப்பர் பாளையம், அம்மாபாளையம், ஆத்துப் பாளையம், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பாத் திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பாத்திரங்கள் மொத்தமாகவும், சில் லறையாகவும் விற்பனை செய்யும் கடைக ளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு சில்வர், பித்தளை, காப்பர் ஆகியவற்றின் மூலம் பாத் திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பாத் திர உற்பத்தி பட்டறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரம் முதல் 4 ஆயி ரம் தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வரு கின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கான சம்பளம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போடப்பட்ட ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடையள்ளது. இந்நிலையில் தொழிற்சங்கம் மற்றும் உற் பத்தியாளர்கள் சங்கம் ஒப்பந்தம் நிறைவு பெறும் முன்னரே தற்போது உள்ள விலை வாசி உயர்வுக்கு ஏற்ப புதிய ஒப்பந்தத் தை நிறைவேற்ற வேண்டும் என தொழிலா ளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சிஐடியு பாத்திரத் தொழிலா ளர் சங்க செயலாளர் குப்புசாமி கூறுகையில், வரும் டிச.31 ஆம் தேதியுடன் பாத்திர உற்பத்தி யாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தம் நிறைவு பெற உள்ளது. அடுத்த ஆண்டுகளுக் கான பேச்சுவார்த்தை குறித்து அனைத்து பாத் திர தொழிற்சங்கங்கள் கூட்டம் நடத்தப்ப டும். அதில் விலைவாசி உயர்வு, தொழிலா ளர்களின் தற்போதைய தேவை உள்ளிட்ட வைகள் குறித்து விவாதிக்கப்படும். எவர்சில் வர், பித்தளை, தாமிரம் என பாத்திர உலோ கங்களுக்கு ஏற்ப கூலி உயர்வு குறித்து விவாதிக்கப்படும். அதன்பின் உற்பத்தியா ளர்களுடம் கூலி உயர்வு குறித்த பேச்சு வார்த்தை தொடங்கும். விரைவில் அனைத்து பாத்திர தொழிற்சங்கங்கள் கூட்டம் நடத்த உள்ளோம். இதில் பல முக்கிய கோரிக்கை கள் விவாதிக்க உள்ளோம். கண்டிப்பாக தற் போது உள்ள விலைவாசி உயர்வு மற்றும் தொழிலாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்து வோம் என் தெரிவித்தார்.