மே 23 - 29 வரை ஏற்காட்டில் கோடை விழா
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
சேலம், மே 13- ஏற்காட்டில் 48 ஆவது கோடை விழா மே 23 முதல் 29 ஆம் தேதி வரை நடை பெற உள்ளதென, அறிவிக் கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தி லுள்ள ஏற்காடு, தமிழ்நாட் டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப் படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கோடை விழா நடத்துவது குறித்தான கலந் தாய்வு கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில், கோடை விழாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக் குவரத்து வசதிகள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங் கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைய டுத்து, ஏற்காடு கோடை விழா மே 23 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறும், என அறி விக்கப்பட்டது.