மாதர் சங்கத்தை இழிவுப்படுத்தி பேசிய சீமான்! மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆவேசம்
சேலம், ஜூலை 19- மாதர் சங்கத்தை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்படத்தை கிழித்து, மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பெண்கள் குறித்தும், மாதர் சங்கத்தினர் குறித்தும் இழி வாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதா னத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட் டத் தலைவர் ஆர்.வைரமணி தலைமை வகித்தார். அப்போது சீமானின் உருவப்படத்தை கிழித்தெறிந்தும், காலால் மிதித் தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்டச் செய லாளர் எஸ்.எம்.தேவி, பொருளாளர் கே.பெருமா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின், நிர்வாகிகள் அபிராமி, கோகுல்ராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் விமல் குமார், தலைவர் பிரபாகரன், பொருளாளர் கவின்ராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீமான் மீது புகாரளித்தனர்.