tamilnadu

img

சாலை விரிவாக்கப் பணியின் போதே கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சாலை விரிவாக்கப் பணியின் போதே கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.12- தருமபுரி - அரூருக்கு செல்லும் தேசிய நெடுஞ் சாலையின் ஓரம் ராஜ பேட்டை முதல் சாக்கன் கொட்டாய் வரை கழிவுநீர்  கால்வாய் அமைக்க வேண் டும் என அப்பகுதியினர் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரியிலிருந்து அரூர், திருவண்ணாமலை நோக்கி தினந்தோறும் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதால்,  அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து  நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள்  ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக, இப்பாதையை நான்கு வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட  நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, தருமபுரி-அரூர் வழி யாக திருவண்ணாமலை வரையிலான 113  கிலோமீட்டர் தூரத்தை நான்கு வழிச்சாலை யாக சுமார் ரூ.410 கோடி மதிப்பீட்டில் அமைக் கும் பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்தப் பணி தருமபுரியிலிருந்து அரூர்  வரை பெரும்பாலான இடங்களில் நிறை வடைந்த நிலையில், ராஜப்பேட்டையிலி ருந்து சாக்கன்கொட்டாய் வரை சுமார் 1.5  கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை விரி வாக்கப் பணி இன்னும் முடிவடையாமல் இருந்தது. நிலுவையில் உள்ள இந்தப் பணி யை விரைந்து முடிக்க வேண்டும் என அப் பகுதி கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்ததையடுத்து, கடந்த சில தினங்களாக  இங்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன. கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரிக்கை தருமபுரியிலிருந்து அரூர் செல்லும்  தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது, கிராம மக்களின் நலன் கருதி சாலை யின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது நடைபெறும் ராஜப் பேட்டையிலிருந்து சாக்கன்கொட்டாய் வரை யிலான சாலை விரிவாக்கப் பணியில், சாலை யின் ஓரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட வில்லை என அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுப் பிரமணி என்பவர் கூறுகையில், “தற்போது  ராஜப்பேட்டையிலிருந்து சாக்கன்கொட் டாய் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப் பட்டு வருகிறது. இந்தச் சாலையின் அருகில் ராஜப்பேட்டை கான்காலனி, ராயப்பேட்டை, செட்டிக்கரை கொட்டாய் மேடு, அக்க்ஷய கார்டன், இந்திராநகர் செட்டிக்கரை பழைய வூர், சாக்கன்கொட்டாய், கால்நடை மருத்து வமனை என மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. மேலும், பல்வேறு சிறு தொழில் கடைகளும் இயங்கு கின்றன. இந்த குடியிருப்புகளிலிருந்து வெளி யேறும் கழிவுநீர் வெளியேற தற்போது வழி யில்லை. எனவே, மற்ற இடங்களில் சாலை யின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்தது போன்று, இந்தச் சாலை விரி வாக்கப் பணியின் போதே உடனடியாக கழிவு நீர் கால்வாயையும் அமைத்துத் தர வேண் டும். என்றார்.