12 மாதம் மகப்பேறு விடுப்பு, காலமுறை ஊதியம் வழங்கிடுக
சத்துணவு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
தருமபுரி, மே 13- 12 மாதம் மகப்பேறு விடுப்பு மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், என சத்துணவு ஊழியர் சங்க தருமபுரி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தின் தருமபுரி மாவட்ட 16 ஆவது மாநாடு, தருமபுரி அதியமான் அரசுப் பள்ளி வளாகத்தில் செவ்வாயன்று, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. தேவகி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஜி.வளர்மதி வர வேற்றார். துணைத்தலைவர் சங்கீதா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜே. அனுசுயா, பொருளாளர் எம்.ராமன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத் தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ஏ.தெய்வானை, சத்து ணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.காவேரி உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்கத் தின் மாநிலச் செயலாளர் பெ.மகேஸ் வரி நிறைவுரையாற்றினார். இதில், 40 ஆண்டு கால கோரிக் கையான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்க ளுக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, உட னடியாக குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் ஊழியர் களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும். விலைவாசி உயர் விற்கேற்ப, மாணவருக்கான அரசு மானியத்தை, ஒரு மாணவருக்கு ரூ.5 என உயர்த்தி வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக கே. தேவகி, செயலாளராக பெ.மகேஸ்வரி, பொருளாளராக பி.வளர்மதி, துணைத் தலைவர்களாக ஜி.வளர்மதி, ஜே.அனு சுயா, கே.சங்கீதா, இணைச்செயலாளர் ்களாக டி.மஞ்சுளா, சங்கர், எம்.ஜெய லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பின ராக ஆர்.ஜெயா, தணிக்கையாளராக தங்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், ஆர்.ஜெயா நன்றி கூறினார்.