பொள்ளாச்சி பாலியல் வழக்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நாமக்கல், மே 13- பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்ட தைத் தொடர்ந்து, பள்ளிபாளையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 குற்றவாளிக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை வரவேற்று, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதி யில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதேபோன்று, திமுக மேற்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஜெயமணி தலைமையில், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் மற்றும் லட்சுமணன், முன் னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.5.6 கோடி மதிப்பீட்டில் வீடுகள் முதலமைச்சர் திறந்து வைத்தார்
உதகை, மே 13- உதகைக்கு சுற்றுப்பயணமாக வருகை புரிந்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், முதுமலையில், ரூ.5.6 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்க ளன்று வருகை புரிந்த நிலையில், செவ்வாயன்று முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவ்வாறு வருகை புரிந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பணியாற்றும் பாகன்கள் மற் றும் காவடிகள் என 44 பேருக்கு ரூ. 5.6 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் வளர்க்கப்படும் வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, அங்கு வளர்க்கக்கூடிய யானைகளுக்கு உணவளித்தார். மேலும், ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும் படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். முதலமைச்சரின் வருகையையொட்டி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிய தடைவிதிக்கப்பட்டுள்ள நிலை யில், உதகை முதல் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை கள் முகாம் வரை பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
மலையடிவாரப் பகுதிகளில் பலாப்பழங்களை விற்கத் தடை
மே.பாளையம், மே 13- மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையோரப் பகுதிகளில் பலா மரங்களை தேடி காட்டு யானைகள் வருவ தால், மலையடிவார பகுதி களில் பலாப்பழங்களை விற்க வனத்துறை தடை விதித்துள்ளது. கோவை மாவட்டம், மேட் டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலை யோரம் அரசு மற்றும் தனி யார் தோட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பலா மரங் கள் உள்ளன. தற்போது சீசன் காரணமாக இம்மரங் கள் அனைத்திலும் கனிந்து தொங்கும் பலாப்பழங்களை உண்ண காட்டு யானைகள் வருகின்றன. நுகர்வு திறன் அதிகமுள்ள யானைகள் பலாப்பழங்களின் வாசனை யால் ஈர்க்கப்பட்டு பலாமரங்கள் உள்ள பகுதிகளில் முகா மிட்டுள்ளன. இதனால் யானைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளதோடு பகல் நேரங்களில் கூட யானைகள் நடமாடுவதால் இச்சாலைகள் வழியே பய ணிப்போருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சாலையோர பலா மரங்களில் உள்ள பழங்களை உடனடியாக வெட்டி அப்புறபடுத்த வனத் துறை கொடுத்த அறிவுறுத்தி வருவதோடு இப்பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலாப்பழங்களை விற்கவும் தடை விதித்துள்ளது. மேலும், கல்லாறு பகுதியில் தனிக்குழு அமைத்து கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.