tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

போக்குவரத்து நெரில் - அவதி

தருமபுரி, நவ.12- பாலக்கோடு நகரில் போக்குவரத்து நெரிசலால் வாக னங்கள் ஊர்ந்து செல்வதால், பொதுமக்கள் பெரும் சிர மப்படுகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகர மையப் பகுதியில்  பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலை யத்திலிருந்து தினந்தோறும் 200க்கு மேற்பட்ட அரசு மற்றும்  தனியார் பேருந்துகள் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை,  பழனி, உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் இயங்கும் வணிகக் கடைகள் முன்பு சாலை யை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், சாலையில் செல்லும் வாக னங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங் கள் செல்லும் போது மேலும் கூட்ட நெரிச்சல் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வா கம் துரித நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த  வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.

மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒருவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு

கோவை, நவ.12- மாணவி கும்பல் பாலியல் வன்கொடு மை வழக்கில், இரு கால்களில் போலீசாரால்  சுட்டு பிடிக்கப்பட்ட குணா என்கிற தவசியை  சிகிச்சைப் பின் போலீசார் கோவை மத்திய  சிறையில் அடைத்தனர். கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நவ.2 ஆம் தேதி, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை, மது போதையில் வந்த மூன்று பேர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த னர். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீ சார் வழக்கு பதிவு செய்து 7 தனிப்படைகள்  அமைத்து மூவரையும் தேடி வந்தனர். இந் நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படை யில் வெள்ளக்கிணறு அருகே பதுங்கியிருந்த  சிவகங்கையை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பு சாமி (30), காளீஸ்வரன் (21) மற்றும் மதுரை யை சேர்ந்த குணா என்கிற தவசி (20),  ஆகிய மூவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.  இதில் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்த  சதீஷ், தவசி மற்றும் ஒரு காலின் குண்டு பாய்ந்த காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரும்  கோவை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்நிலையில் போலீசாரால் சுட்டு பிடிக்கப் பட்ட குணா என்கிற தவசி சிகிச்சைக்கு பின்,  உடல் நல தேரியதால், மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்ற போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கருப்புசாமி, காளீஸ்வரன் இருவ ரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். விரை வில் அவர்களும் சிறையில் அடைக்கபட உள்ளனர்.

கிட்னி விற்பனை இடைத்தரகர்களிடம் தொடர் விசாரணை

நாமக்கல், நவ.12- கிட்னி விற்பனையில் ஈடுபட்டு வந்த  இடைத்தரகர்கள் இருவர் கைது செய்த நிலையில், அவர்களிடம் சிறப்பு  புலனாய்வு குழுவினர் தொடர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் பல்லாயிரக்கணக்கான விசைத் தறிகள் இயங்கி வருகிறது. தொழிலில் போதிய வருமானம் இல்லாத நிலை யில், உள்ள விசைத்தறி தொழிலாளர்க ளின் வறுமையை பயன்படுத்தி தொழி லாளிகளின் கிட்னியை தானமாக பெற்று அதை இடைத்தரகர்கள் மூலமாக விற் பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இது குறித்த புகார்கள் எழுந்து நிலையில் தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவத்துறை சார் பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசார ணைகள் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் கடந்த சில மாதத்தில் கிட்னி விற்பனையில் இடைத்தரகரர்களாக செயல்பட்டு வந்த பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த  ஆனந்தன் மற்றும் ஸ்டான்லி மோகன் ஆகிய இருவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர்.  இந்நிலையில் தொடர்ந்து விசார ணையை மேற்கொள்ளும் வகையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் அனுமதி யைப் பெற்று 5 நாட்கள் போலீஸ்  காவலில் விசாரணைக்கு பள்ளிபாளை யம் பயணியர் மாளிகைக்கு அழைத்து வந்துள்ளனர். இருவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு டிஎஸ்பி, எஸ்பி ஆகி யோர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து சிறப்பு புலனாய் போலீ சார் கூறும் பொழுது, ஐந்து நாட்க ளுக்கு அனுமதி கேட்டு இருவரையும் அழைத்து வந்து ரகசியமான முறையில்  விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று தொடங்கி சனியன்று வரை விசாரணை நடைபெற உள்ள  நிலையில், மூன்றாவது நாளாக புதன் றும் விசாரணை நடைபெறுகிறது. தேவைப்பட்டால் விசாரணை நாட் களை நீட்டிக்கவும் அல்லது முன்பே விசாரணை முடிவுற்றால் உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் திட்ட மிட்டுள்ளோம். மேலும் கிட்னி விற்பனை விவகாரத் தில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு தொடர்பு உள்ளது? இந்த விவகாரத்தில்  யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார் கள் என்பது குறித்தும் தொடர்ந்து விசா ரணை நடைபெற உள்ளது என்றனர். தமிழகத்தையே உலுக்கிய கிட்னி விற்பனை விவகாரத்தில் தற்போது இரு வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  தொடர்ந்து அவர்கள் கூறும் தகவலைப்  பொறுத்து மேலும் பல அதிர்ச்சிகரமான  தகவல்கள் வெளி வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.