tamilnadu

img

ஜாக்டோ ஜியோ பிரச்சாரம்

ஜாக்டோ ஜியோ பிரச்சாரம்

தருமபுரி, நவ.12- பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  நவ.18 ஆம் தேதியன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற உள்ள நிலை யில், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதனன்று  பிரச்சாரம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திட வேண் டும். ஆசிரியர் தனித்தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பி னை காரணம் காட்டி 23.08.2010 க்கு முன்னதாகப் பணி யேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாது காத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18 ஆம்  தேதியன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் ஜாக்டோ  ஜியோ சார்பில் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள் முழுமையாக பங்கேற்க வேண் டும் என தருமபுரி மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று  வருகிறது. தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  நடைபெற்ற பிரச்சாரத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளர் பி. எம். கெளரன், மாவட்ட நிதிகாப்பாளர் கே. புக ழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளா ளர் கே. புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர் சங்கர், தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்டத் தலை வர் முகமது இலியாஸ் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை  விளக்கிப் பேசினர்.