tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் சேர அழைப்பு

உதகை, மே 13- வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக  சேர தொழிலாளர் உதவி ஆணையர் அழைப்பு விடுத்துள் ளார். இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, உட லுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்  உருவாக்கப்பட்டு, 19 வகையான தொழிலாளர் நல வாரி யங்கள் செயல்பட்டு வருகிறது. அதில், பல்வேறு வகையான  கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடு பட்டுள்ள, 18 வயதிற்கும் மேற்பட்ட 60 வயதிற்குட்பட்ட தொழி லாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, வீட்டு வேலை செய் யும் தொழிலாளர்கள் வீட்டு பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட உள்ளனர். உறுப்பினர்களாக சேருபவர்கள் www.tnuwwb.in என்ற இணையதள மூலம்  விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். வாரி யத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்கள், 5 ஆண்டுக்கு ஒரு முறை பதிவினை புதுப்பித்து கொள்ள  வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடையில் தீ விபத்து

கோவை, மே 13 – ஆவாரம்பாளையம் பகு தியில் உள்ள தண்ணீர் சுத்தி கரிப்பு பொருட்கள் கடையில்  பயங்கர தீ விபத்து ஏற் ற்பட்டது. கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதி யில், கணபதியில் இருந்து ராமகிருஷ்ணா மருத்துவ மனை செல்லும் மேம்பாலத் தின் கீழ் அமைந்துள்ள தாவுத் என்பவருக்கு சொந்த மான நியூ வாட்டர் டெக்னா லஜிஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு தண் ணீர் சுத்திகரிப்பு நிலைய பொருட்கள் தயாரித்து வரு கின்றனர். இந்த கடையில் செவ்வாயன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட் டது. தகவலறிந்து, கண பதி, மேற்கு மற்றும் காந்தி புரம் தீயணைப்பு நிலை யங்களைச் சேர்ந்த 18 வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த  தீ விபத்திற்கான காரணம்  இதுவரை கண்டறியப்பட வில்லை. தீ விபத்தால் ஏற் பட்ட சேதத்தின் மதிப்பு முழு மையாக கணக்கிடப்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதகையில் மூன்று நாள் ரோஜா கண்காட்சி 34,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்

உதகை, மே 13 – நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மூன்று நாள் ரோஜா கண்காட்சியின் நிறைவு நாளான திங்களன்று மாலை  வரை 34,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப்  பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்த னர். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய கோடை விழாவான 20 ஆவது ரோஜா  கண்காட்சி கடந்த 10 ஆம் தேதி  தொடங்கியது. இந்த கண்காட்சியின்  சிறப்பம்சமாக சுமார் 2 லட்சம் பல்வேறு  வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு  டால்பின், பென்குயின், முத்து சிற்பி,  கடல் குதிரை, நீலத் திமிங்கலம், பல வித மான மீன் வகைகள், நத்தை, கடல் கன்னி, நட்சத்திர மீன் மற்றும் அழிந்து வரும் கடல் உயிரினமான கடல் பசு போன்ற கடல்வாழ் உயிரினங்களின் வடிவங்கள் “சேவ் அக்குவேடிக் வோர்ல்டு” என்ற கருப்பொருளில் உரு வாக்கப்பட்டிருந்தது பார்வையாளர் களை வெகுவாக கவர்ந்தது. ரோஜாக்களால் அமைக்கப்பட்ட இந்த கண்கவர் உருவ வடிவமைப்பு கள் மட்டுமின்றி, பூங்காவில் பூத்துக் குலுங்கும் ஆயிரக்கணக்கான வண்ண  ரோஜாக்களும், அரியவகை பச்சை  வண்ண ரோஜாக்களும் பார்வையா ளர்களின் கண்களுக்கு விருந்தளித் தன. 20ஆவது உதகை ரோஜா காட்சி யினை சிறப்பிக்கும் வகையில், தோட் டக்கலைத் துறையின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடத் தப்பட்டன. மேலும், ரோஜா செடி வளர்ப் பவர்களை ஊக்குவிக்கும் வகையில்  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மொத்தம் 36 போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர். உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் தலைமையில் ரோஜா காட்சி யின் நிறைவு விழா திங்களன்று மாலை  நடைபெற்றது. தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி அனைவரையும்  வரவேற்றார். போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு 12 சுழற்கோப்பை கள், 30 முதல் பரிசுகள், 27 இரண்டாம் பரிசுகள் மற்றும் 46 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு சிறந்த  ரோஜா மலர்ச்சிக்கான கோப்பை அரு வங்காடு வெடிமருந்து தொழிற் சாலைக்கு வழங்கப்பட்டது. இவ்விழா வின் இறுதியில் உதகை தோட்டக் கலை உதவி இயக்குநர் நன்றி கூறி னார்

வீடுகளையே ஒதுக்கீடு செய்யக் கோரி மனு

ஈரோடு, மே 13-  ஈரோடு பவானி சாலையில் உள்ள அன்னை சத்யா நகர் குடியிருப்பில் வசித்த வர்கள், புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்களுக்கு முன்பு இருந்த அதே வீட்டு எண்ணை ஒதுக்கீடு செய்யுமாறு திங்களன்று ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, 35  ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழு தடைந்த பழைய 228 வீடுகள் 6 ஆண்டு களுக்கு முன் இடிக்கப்பட்டன. தற்போது 300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பழைய  குடியிருப்பில் இருந்த அதே முகவரியி லேயே ஆவணங்கள் இருப்பதால், ஏற் கனவே வசித்தவர்களுக்கு அதே வீட்டு எண்ணை ஒதுக்க வேண்டும் என்றும், தரைத் தளத்தில் இருந்த முதியவர்களுக்கு மேல் தளங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டதால் சிர மம் இருப்பதாகவும், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதை மாற்றி, பழைய வீட்டு எண்களையே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.