மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்
முத்தரப்பு ஒப்பந்தத்தை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமலாக்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தவதை வாரிய ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கடலூர் கேப்பர் மலை மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.எ.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர்கள் கே.ஆதிமூலம், ஜி. சீதாராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் என்.ஜெயராமன், கே.நாராயணசாமி, மாவட்டச் செயலாளர் டி.வெங்கடாசலம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. பழனிவேல், மாவட்ட பொருளாளர் எம். ராமசாமி ஆகியோர் உரையாற்றினர். விழுப்புரம் மாவட்ட மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவுக்கு சங்கத்தின் திட்டத் தலைவர் சி.ஜெயராமன் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் எம்.புருஷோத்தமன், திட்ட இணை செயலாளர் தங்க.அன்பழகன், சிஐடியு மாவட்ச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கே.அம்பிகாபதி, திட்டப் பொருளாளர் எம்.சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.'
கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
கடலூர்,மே 13- கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) தொடங்கிய ஜமாபந்தி 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். ஜமாபந்தியில் தொண்டமாநத்தம், கோதண்ட ராமா புரம், பாதிரிக்குப்பம், கருப்படித்துண்டு, கூத்தப்பாக்கம், நடுவீரப்பட்டு, சேடப்பாளையம், செம்மங்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். இதில் வட்டாட்சியர் மகேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நில அள வையர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மே 16 விழுப்புரத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
விழுப்புரம், மே 13- விழுப்புரத்தில் மே 16 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. தனியார் துறையில் பணி வாய்ப்பு பெற விரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவி லான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஆண்டுக்கு இரு முறை பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. அதன்படி, மே மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளியன்று (மே 16) விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்கள் நிரப்ப உள்ளார்கள்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐடிஐ, டிப்ளமோ, பி.டெக், நர்சிங், ஃபார்மசி உள்ளிட்ட பல்வேறு தகுதியுடைய படிப்பு களுடன் வேலை தேடும் இளைஞர்கள் இம் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இந்த முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.தனியார் துறையில் பணிவாய்ப்பு பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச் சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
கடலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகள், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். தொடர்ந்து, வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பிரிதிகா கூடுதல் மதிப்பெண் பெற்றமைக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கியதோடு, மாணவி கோரிக்கை வைத்ததிற்கிணங்க உடனடியாக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் மூலம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டிலான பேட்ரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஞானசங்கர், துரைபாண்டியன், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.