பெண்ணிடம் தங்க நகைகள், பணம் பறித்த டிஎஸ்பியின் மகன் கைது
கோவை, நவ.11- கோவையில் செல்போன் செயலி மூலம் பழகி, இளம் பெண்ணிடம் 3 பவுண் தங்க நகை கள் மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை பறித்து போலீஸ் டி.எஸ்.பியின் மகன் தனூஷ் என்ப வரை பந்தய சாலை போலீசார் கைது செய்த னர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஆறு மாதங்களாக பாப்பநாயக்கன்பாளை யத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரு கின்றார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, செல்போன் செயலி மூலம் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தனூஷ் (28) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட் டது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் பணி யாற்றும் டி.எஸ்.பி தங்கபாண்டியன் என்பவ ரது மகன். ஆன்லைன் செயலி இளம் பெண்ணிடம் பேசிய தனூஷ், தனது பெயரை தருண் எனக் கூறி பழகி வந்தார். இந்நிலையில் நேரில் பார்த்து பேசலாம் எனக் கூறி கடந்த நவ.2 ஆம் தேதியன்று மாலை தனது காரை எடுத்துக்கொண்டு பாப்பநாயக்கன் பாளை யம் மகளிர் விடுதிக்கு சென்று இளம் பெண் ணை விடுதியிலிருந்து அழைத்து சென்றுள் ளார். பின்னர் காபி குடிக்கலாம் எனக் கூறி கோவை - கேரளா எல்லையான வாளையாறு தனியார் கல்லூரி அருகே அழைத்துச் சென் றார். காரை நிறுத்திய தனூஷ், அங்கு வெளி யே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு தனூஷின் நண்பர் ஒருவர் வந் துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து இளம்்பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த செயின், மோதிரம், ஆகிய 3 பவுண் நகைகளை பறித்துள்ளனர். பின்னர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து இளம் பெண் தனது நண்பர் மூலம் ஆன்லைன்யில் பணம் பெற்ற, ரூ.90 ஆயிரம் பணத்தையும் பறித்துள்ளனர். பின்னர் மீண்டும் இளம்பெண்ணை கோவை அழைத்து வந்து, கோவை திருச்சி சாலையில் இறக்கி விட்டுள்ளனர். இரவு நேரத்தில் ஹாஸ்டலில் அனுமதிக்க மாட்டார் கள் என அந்த இளம் பெண் கூறியதால் தனூஷ், இளம்பெண்ணின் மொபைலை வாங்கி அதன் மூலம் நட்சத்திர ஹோட்ட லில் அறையை பதிவு செய்து கொடுத்து அனுப்பியுள்ளார். நட்சத்திர விடுதியில் அறைக்கு சென்ற இளம் பெண் இது குறித்து தனது வீட்டில் தெரி வித்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி காலை இளம்பெண்ணின் சகோதரி மற்றும் உறவினர் கள் பந்தய சாலை காவல் நிலையத்தில் தனூஷ் மீது புகார் அளித்தனர். தனூஷ் குறித்து போலீசார் விசாரித்த போது காவல் துறை அதிகாரியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை பந்தய சாலை போலீ சார் இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தனூஷை திங்களன்று கைது செய்தனர். மேலும் இவர் தருண் என கூறி டேட்டிங் செயலியில் பழகி வந்ததும் தெரிய வந்தது. கோவை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப் பட்ட அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கோவை கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடத்த அதே நாளில் இந்த சம்பவமும் நடத்த நிலையில், ஒரு வார காலத்திற்கு பின்பு தருணை கோவை பந்தயசாலை போலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்து இருப்பது குறிப்பிடதக் கது.