ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல்
சேலம், ஜூலை 19- ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொலை மிரட் டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாநகரக் காவல் ஆணையரிடம் சனியன்று புகாரளிக்கப்பட் டது. இதுதொடர்பாக அதில் கூறியிருப்பதா வது, சேலம் மாநகர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பகுதியில் கடந்த 20 வருடங் களாக அங்கீகாரம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில், அதேபகுதியில் எந்தவித அடையாளங் களும் இன்றி கடந்த ஐந்தாண்டுகளாக சேகர் என்பவர் புதிதாக ஆட்டோ ஸ்டாண்ட் அமைத் துக் கொண்டு தொல்லை அளித்து வரு கிறார். சில குண்டர்களை உடன் சேர்த்துக் கொண்டு, அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்டாண்ட் ஓட்டுநர்களின் ஆட்டோக்களை சேதப்படுத்தி விடுவதாகவும், ஓட்டுநர்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தால், காவல் நிலைய ஆய்வாளர், ‘இருதரப்பினரும் அடித்துக் கொண்டும், வெட்டிக் கொண்டு வந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக’ அலட்சியமாக கூறுகிறார். எனவே, இப்பிரச்சனை சம்பந்தமாக நடவ டிக்கை எடுத்து, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ் வில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார் மற்றும் திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.