tamilnadu

img

நிலப்பட்டா, மனைப்பட்டா வழங்கக்கோரி சிபிஎம் போராட்டம்

நிலப்பட்டா, மனைப்பட்டா வழங்கக்கோரி சிபிஎம் போராட்டம்

தருமபுரி, மே 13- பட்டியல், பழங்குடியின மக்க ளுக்கு நிலப்பட்டா மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட் டத்தில் பட்டியல் மற்றும் பழங்குடி யின மக்கள் அதிகளவில் வாழ்ந்து  வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்களுக்கு விவசாய நிலம் இல்லை; தினக்கூலிகளாக உள்ளனர். தரிசு நிலம், கல்லான் குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை  புஞ்சை, அரசு அனாதீனம் உள் ளிட்ட நிலங்களில் ஒரு சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆவணங்களில் மட்டும் நீர்ப்பிடிப்பு பகுதி என்று இருக்கும் நிலங்களி ளும் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். புறம் போக்கு நிலங்களில் பல்லாண்டு காலம் சாகுபடி செய்து வரும் விவ சாயிகளுக்கும், வனத்தை ஒட்டி யுள்ள புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் நிலங்களுக் கும் வகை மாற்றம் செய்து பட்டா  வழங்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர்கள் பி.குமார், கே.தங்கராசு ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், அரூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது.