பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் காத்திருப்புப் போராட்டம்
திருப்பூர், மே 13 - வெள்ளகோவிலில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை யில் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. காங்கேயம் தாலுகாவில் வீடில் லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2024 டிசம்பர் 31 அன்று காங் கேயத்தில் மனுக் கொடுக்கும் இயக்கத்தை நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங் கேற்று 1150 மனுக்களை வருவாய்த் துறையிடம் அளித்தனர். நான்கு மாதங்கள் கடந்தும் வருவாய்த் துறை எந்த நடவடிக்கையும் எடுக் காததால், மக்கள் போராட்டத்தில் இறங்கினர். குறிப்பாக வெள்ள கோவில் ஒன்றியத்தில் சேனாதிபா ளையம், ஸ்ரீராம் நகர், நடேசன் நகர், தீத்தாம்பாளையம், சிவநாதபுரம், சேரன் நகர், ஏபி புதூர், வடக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 400 பேர் விண்ணப்பித் திருந்தனர். எனவே, பட்டா கோரி அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவ டிக்கையைத் தெரிவிக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தலைமை யில் செவ்வாயன்று வெள்ளகோ வில் கிராம நிர்வாக அலுவலர் அலு வலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு, சிபிஎம் காங்கே யம் தாலுகாக்குழு உறுப்பினர் பி. கருப்பசாமி தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் செ.மணிகண்டன், தாலுகாச் செயலாளர் எம்.கணே சன், தாலுகாக்குழு உறுப்பினர் இரா.செல்வராஜ் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி உரையாற்றி னர். மேலும், அதிகாரிகள் பதில் அளிக்காதவரை, அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தங்கி, போராட்டத்தை தொடர்வோம் என மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் அறிவித்தனர். இதன் பிறகு காவல் உதவி ஆய்வாளர் மூலம் வெள்ள கோவில் வருவாய் ஆய்வாளர் சு. சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தை விபரத்தை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சியினர் கேட்டு கொண்ட னர். இதன்படி, வருவாய் ஆய்வா ளர் சு.சுந்தரி, வீட்டுமனை பட்டா கோரி விண்ணப்பித்திருக்கும் 200 பேர் விபரம் ஆய்வு செய்யப்பட்டுள் ளது. தகுதியானவர்கள் விபரம் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படை யில் அனைவருக்கும் பட்டா வழங்க காங்கேயம் வட்டாட்சியரி டம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என்றார். இதையடுத்து, மக்களிடம் பேசிய தலைவர்கள் தகுதியுள்ள அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா கிடைப்பதற்கு உங்களோடு உறுதியாக மார்க்சிஸ்ட் கட்சி போராடும், என்றனர்.