எரிவாயு இணைப்பு கட்டாயமாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
ஈரோடு, நவ. 12- ஈரோடு மாநகராட்சிப் பகுதிக ளில் வீடுகளுக்கு குழாய் வழியாக சமையல் எரிவாயு (Piped Natu ral Gas - PNG) வழங்கும் திட்டத் தைச் செயல்படுத்தும் ஊழியர்கள், ‘இனி சிலிண்டர் விநியோகம் இருக் காது, குழாய் இணைப்பை பெறு வது மட்டுமே ஒரே வழி’ என்று கூறி பொதுமக்களுக்கு அச்சுறுத் தல் அளிப்பதாகப் பரவலான குற் றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்கார ணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பமும், அச்சமும் நிலவு கிறது. 60 வார்டுகளைக் கொண்ட ஈரோடு மாநகராட்சியில், தேர்ந் தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பி னர்களும், மேயரும் பொறுப்பில் உள்ளனர். ஆயினும், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் தனி அலுவலர் (ஆணையாளர்) இருந்த காலத்தி லேயே தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளே இன்னமும் முழுமையடையாத நிலையில் உள் ளன. இந்நிலையில், வீடுகள் மற்றும் வணிக உபயோகங்களுக்கான சமையல் எரிவாயுவை குழாய் வழி யே வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், எரி வாயு உருளைகள் (LPG சிலிண்டர் கள்) விநியோகம் நிறுத்தப்பட்டு விடும் என மாநகர மக்களை அச்ச மூட்டி, குழாய்வழி இணைப்பை கட் டாயமாகப்பெற தூண்டுவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், பெரும்பாலான மக்கள் வீடுகள் மற்றும் கேட்டரிங் போன்ற வணிகப் பயன்பாட்டிற்கு, பிரிக்கப்பட்ட விநி யோக முறையுடன் கூடிய எரிவாயு உருளைகளையே வாங்கி பயன்ப டுத்தி வருகின்றனர். மாற்று எரிவாயு உத்திகள் நடைமுறையில் இருந்தா லும், சிலிண்டர்களே முதன்மை யாக உள்ளன. இந்தச் சூழலில், குழாய்வழி எரி வாயு விநியோகத்தை கட்டாயப்ப டுத்துவது ஏன்? என்பது மாநகர வாசிகளின் பிரதான கேள்வியாக உள்ளது. மேலும், குழாய்வழி எரிவாயு திட்டம் உண்மையிலேயே கட்டாயமாக்கப்படுகிறதா? எரிவாயு உருளைகள் விநியோ கம் முற்றிலுமாக நிறுத்தப்படுமா? இத்திட்டம் பற்றிய சரியான தக வல்கள் மற்றும் தெளிவான வழி முறைகள் குறித்து மாநகராட்சி ஏன் முறையாக விழிப்புணர்வு ஏற்ப டுத்தவில்லை? மாநகராட்சி அதி காரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் ஏன் உரிய பதில்கள் கிடைப்பதில்லை? என் பது போன்ற பல கேள்விகளுடன் மாநகர மக்கள் குழப்பத்தில் உள்ள னர். குழாய்வழி எரிவாயு வழங்கு வது மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் (PNGRB) அங்கீகரிக்கப்பட்ட நகர எரிவாயு விநியோக (CGD) நிறுவ னங்களால் செயல்படுத்தப்படுகி றது. இந்தத் திட்டம் தமிழகம் முழு வதும் 2030ஆம் ஆண்டுக்குள் பல இலக்குகளுடன் செயல்படுத்தப் பட்டு வருகிறது. மாநகர மக்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில், உள்ளாட்சி அமைப்பான ஈரோடு மாநகராட்சி நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வாயிலாகவும் இத் திட்டத்தின் உண்மை நிலை, நன்மை கள், கட்டாயத் தன்மை மற்றும் காலக்கெடு குறித்து உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்ப தே அனைத்துத் தரப்பினரின் எதிர் பார்ப்பாக உள்ளது. குழப்பத்தை நீக்கி, நம்பகத்தன்மையுடன் கூடிய பதில்களை வழங்குவது மாநக ராட்சியின் கடமையாகும்.