திமுக நீர், மோர் பந்தலுக்கு தீ அதிமுக நிர்வாகி கைது
சேலம், மே 13- சங்ககிரி அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலுக்கு தீ வைத்ததாக, அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூ ராட்சிக்குட்பட்ட செட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பந்தலுக்கு ஞாயிறன்று அதிமுக 7 ஆவது வார்டு கிளைச் செயலாளர் காஸ்ட்ரோ தீ வைத்து, அரசிராமணி பேரூராட்சித் தலைவர் பி.காவேரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேரூராட்சித் தலைவர் தேவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா காட்சி களின்படி விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி காஸ்ட்ரோவை போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.
மசாஜ் செய்யும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்க ஆட்சியரிடம் மனு
தருமபுரி, மே 13- ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்று லாப் பயணிகளுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வரும் தொழிலாளர்கள், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், ஒகே னக்கல் பிரதான அருவியில் குளிப்பதற்காக வரும் சுற்று லாப் பயணிகளுக்கு எண்ணெய் தேய்க்கும் தொழிலில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறோம். தற்போது காவல் துறையினர் அருவிக் கரையில் எண்ணெய் தேய்க்க அனுமதி தர மறுக்கின்றனர். இதனால் எங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, எங்களுக்கு இத்தொழி லில் தொடர்ந்து ஈடுபட முறையாக உரிமம் வழங்க வேண் டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகத்தில் கத்தி குத்தப்பட்ட விபத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
சேலம், மே 13- முகத்தில் கத்தி குத்தப்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து, காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்து வக்குழுவினருக்கு பாராட்டு குவிந்து வரு கிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் தேவி மீனாள் செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் மாவட்டம், கொண் டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ரோஹித் (5). கடந்த மே 5 ஆம் தேதியன்று வீட்டில் விளை யாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முகத்தில் கத்தி குத்தியுள்ளது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்த னர். இதையடுத்து உடனடியாக சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தவுடன், மூளை மற் றும் ரத்த குழாய் பாதிப்பு குறித்து சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், முகத் தில் குத்திய கத்தி எலும்புகளை ஆழமாக துளைத்திருப்பதும், மண்டையை துளைத்து சென்று, மூளையில் உள்ள ஒரு பெரிய ரத்த நாளத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், கத்தியின் நுனி பகு தியானது மண்டை ஓட்டின் அடிப்பகுதி வரை குத்திக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நுண்கதிர் துறை நிபுணர்கள் இதனை துல்லியமாக கண்டறிந்து அறிக்கை அளித்தனர். இதனைத்தொடர்ந்து, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் சங்கர் தலை மையில் அறுவை சிகிச்சை குழு, சிறுவனின் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் இருந்த கத் தியை ரத்த நாளத்திற்கு சேதம் ஏற்படுத்தா மல் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றியது. மூளைக்குள் ரத்தப்போக்கு ஏற் படுவதை தடுத்து, சிறுவனின் உயிர் காப் பாற்றப்பட்டது. பின்னர், உயர் சார்பு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, தொற்று மற்றும் பிற காரணிகளைத் தடுக்க குழந்தை மருத்துவத் துறையுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறு வன் நலமாக இருப்பதாகவும், ஆபத் தில்லை என்றும் மருத்துவர்கள் உறுதிப் படுத்தினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்து வர்களிடையேயான ஒருங்கிணைப்பு மூலம் சரியான சிகிச்சை அளித்து சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழு வினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித் துக் கொள்கிறேன், என்றார். இந்நிகழ்வில், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.
அரசுப்பள்ளியின் வசதிகள் குறித்து பேனர் அமைப்பு
நாமக்கல், மே 13- குமாரபாளையம் அரசுப் பள்ளியின் அதன் வசதிகள் குறித்து பேனர் வைக்கப்பட் டுள்ளது. பொதுமக்கள் பெரும்பா லும் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வியில் பயில வைக்க, தனியார் பள் ளிகளை தான் நாடுவது வழக்கம். ஆனால், வசதி யில்லாத பொதுமக்கள் தங் கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது வழக்கம். மாண வர்கள் பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு செல் லும் போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின் றவர்கள் ஒன்றாக கல்லூரி யில் சேரும் நிலை உருவாகி வருகிறது. மேலும், தமிழக அரசு சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத் தப்பட்டுள்ளது. இந்நிலை யில், புதியதாக பள்ளியில் சேரும் மாணவர்கள், பெற் றோர்கள் அறிந்திடும் வகை யில், குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க, பள்ளியின் வசதிகள், இதர சிறப்பம்சங்கள் குறித்து பேனர் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
கணவன், மனைவி வெட்டிக்கொலை: ஒருவர் கைது
சேலம், மே 13- சேலத்தில் கணவன், மனைவி இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத் தில் ஈடுபட்ட ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளை யம், எட்டிகுட்டை தெருவைச் சேர்ந்தவர் பாஸ் கரன் (70). இவரின் மனைவி வித்யா (60). இத்தம்பதியினர் கடந்த 35 ஆண்டுகளாக அதேபகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஞாயிறன்று மாலை வீட்டின் மேல் மாடியிலிருந்து மகன் கள் இறங்கி வந்து பார்த்தபோது, கணவன், மனைவி இரண்டு பேருமே உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர். இதனால் அதிர்ச்சிய டைந்த மகன்கள், சூரமங்கலம் காவல் துறை யினருக்கு தகவலளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து, உயி ருடன் இருந்த பாஸ்கரனை மீட்டு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட் டார். மேலும், வித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீ சார், கொலையில் தொடர்புடைய வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண் டனர். அதில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் (33) என்பதும், கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசிப்பதுடன், டைல்ஸ் ஓட்டும் பணிக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும், கடன் தொல்லை யால் அருகில் வசிக்கும் பாஸ்கரன் மனைவி வித்யா அணிந்திருந்த நகைகளைக் கொள் ளையடித்து சென்று, கடனை அடைக்க திட்ட மிட்டுள்ளார். தொடர்ந்து, தம்பதி வீட்டில் தனி யாக இருப்பதையறிந்த சந்தோஷ், இருவரை யும் கடப்பாறை, சம்மட்டியால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, சந்தோஷை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.