கோவையில் கடந்த நவம்பர் 2 அன்று கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான மூவரும் அதே தினத்தன்று முதியவர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி கோவை சர்வதேச விமான நிலையத்திற்குப் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் (30), காளீஸ்வரன் (28) மற்றும் உறவினர் குணா (25) ஆகிய 3 பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். 3 பேரையும் போக்சோ, வன்கொடுமை சட்டம் உள்ளிட்டவற்றில் கைது செய்தனர்.
சமீபத்தில், நவம்பர் 27 அன்று மூவரையும் ஒருநாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றனர். அந்த விசாரணையில், நவம்பர் 2 காலை அன்னூர் அருகே செரையாம்பாளையத்தில் ஆட்டு வியாபாரியான தேவராஜை மூவரும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தேவராஜ் வழக்கமாக ஆட்டுப் பரிவர்த்தனை செய்து வீடு திரும்பி ஓய்வெடுக்கும் இடத்தில், மூவரும் அமர்ந்து மது அருந்தியதை அவர் கண்டித்து பேசியதாகத் தெரிகிறது. இதற்குக் கோபமடைந்த மூவரும் கட்டையால் தாக்கி, கொலை செய்து, சடலத்தை கோவில்பாளையம் காவல் எல்லைக்குள் தூக்கி எரிந்ததாக கைதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
