கோவை, டிச. 22 – ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை நீலாம்பூர் ஊராட்சி வார் டில் நாகர்ஜூன் என்கிற இளம் வயது வேட்பாளர் போட்டியிடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதியதாக பிரிக் கப்பட்ட 9 மாவட்டங்களை தவி ணர்த்து ஊரக உள்ளாட்சி அமைப் புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன் படி, வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் துவங்கி, 16 ஆம் தேதியுடன் முடிந்தது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக் கப்பட்டு வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் கோவை நீலாம்பூர் ஊராட்சி 3 ஆவது வார்டில் போட்டியிடும் எஸ்.நாகர்ஜூன் இளம் வயது வேட்பாளர் என்பது தெரியவந் துள்ளது. 21 வயதாகும் இவர் ஊட கவியல் துறை பட்டபடிப்பு படித்து வருகிறார். இவர் நீலாம்பூர் ஊராட் சியின் 3 ஆவது வார்டில் சீப்பு சின் னத்தில் போட்டியிடுகிறார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக அளவில் இளம் வயது ஆண் வேட் பாளர் எஸ்.நாகர்ஜூன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.