tamilnadu

img

பல்லகவுண்டம்பாளையத்தில் சிஐடியு சார்பில் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்

திருப்பூர், செப். 22 – திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி தாலுகா, பல்லகவுண்டம்பாளை யத்தில் சிஐடியு சங்கங்கள் சார்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஞாயிறன்று நடத்தப்பட்டது. கடந்த இரு நாட்களாக பல்லக வுண்டம்பாளையம் பகுதியில் சிஐடியு சார்பில் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டு, நலவாரிய உறுப்பினர் பதிவு செய்வதால் கிடைக்கும் பலன் கள் குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிறன்று உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுத் தொழிலாளர், கட்டுமானத் தொழிலாளர், விசைத்தறி தொழி லாளர், தையல் உள்பட பல்வேறு முறைசாராத் தொழில் சார்ந்த தொழி லாளர்கள் நலவாரிய உறுப்பினர் களாக சேர்க்கப்பட்டனர். சிஐடியு சங்கங்கள் சார்பில் வி.காமராஜ், வி.கே.பழனிச்சாமி, சி.மகேந்திரன், ஆர்.பழனிச்சாமி, கே.பிரகாஷ், ஆர்.பழனிச்சாமி, எஸ்.தேவராஜ், குருசாமி, கே.அர்ச்சுனன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதில் கட்டு மானம், விசைத்தறி, பொது, தையல் தொழிலாளர்கள் சுமார் 60 பேர் நலவாரிய உறுப்பினர்களாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்ட னர். முகாமுக்கான ஏற்பாடுகளை சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் செய்திருந்தது.