tamilnadu

img

தொழிலாளர் சட்டத் திருத்தங்களை எதிர்த்து

திருப்பூர், ஆக. 3 - மத்திய அரசு கார்ப்பரேட் முத லாளிகளுக்கு ஆதரவாக தொழிலா ளர் சட்டங்களைத் திருத்துவதைக் கண்டித்தும், பொதுத்துறை நிறு வனங்களை தாரை வார்ப்பதை எதிர்த்தும் திருப்பூரில் தொழிற்சங் கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் தியாகி குமரன் நினை வகம் முன்பாக  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எச்எம்எஸ் தொழிற்சங்கச் செயலாளர் ராஜா மணி தலைமை வகித்தார். இதில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண் டித்து சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் நிர்வாகி ரங்கசாமி, ஐஎன் டியுசி செயலாளர் அ.சிவசாமி, எம்எல்எப் நிர்வாகி மு.சம்பத் ஆகியோர் உரையாற்றினர். இதில் சிஐடியு, ஏஐடியுசி, எல் பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் மற்றும் எம்எல்எப் ஆகிய சங்கங் களைச் சேர்ந்த பெண்கள் உள்பட பெருந்திரளான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசை எதிர்த்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.