tamilnadu

img

குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க கோரிக்கை

அவிநாசி, ஆக. 3 - அவினாசியை அடுத்த  கைகாட்டி அருகில்  குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வரும் நிலையில் உடைப்பை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில், அவிநாசி ஒன்றியம், கைகாட்டி புதூர் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதேபோல் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணா பள்ளி அருகிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இருபக்கமும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தினசரி பல ஆயிரம் லிட்டர்  குடிநீர் வெளியேறி சாலையிலும், சாக்கடையிலும் கலந்து வீணாகச் செல்கின்றது. ஆகவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.